Cinema

`போகன்’ படத்திற்கு பிறகு ஜெயம் ரவி `வனமகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனைத்தொடர்ந்து தற்போது `நாய்கள் ஜாக்கிரதை’ பட இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் `டிக் டிக் டிக்’ படத்தில் நடித்து வருகிறார்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி காட்டுவாசியாக நடித்துள்ள படம் `வனமகன்’. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மிக் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்தில், ஜெயம்ரவியுடன், சாயிஷா சேகல், தம்பிராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்கியுள்ள நிலையில், இப்படத்தை ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தமிழ் புத்தாண்டு ரிலீசாக தனுஷ் இயக்கியுள்ள `பவர்பாண்டி’ படமும், லாரன்ஸின் `சிவலிங்கா’ படமும் ரிலீசாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிம்புவின் `ஏஏஏ’ படமும் அதே நாளில் ரிலீசாகும் என்று கூறப்படும் நிலையில், ஜெயம் ரவியின் `வனமகன்’ படமும் அதே நாளில் வெளியாக உள்ளதாக கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், அதனை அறிய காத்திருக்கத் தான் வேண்டும்.
The post சிம்பு, தனுஷுக்கு எதிராக களமிறங்குவாரா ஜெயம் ரவி? appeared first on tamizlnews.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குனர் முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் மாதம் 23-ஆம் தேதி ரிலீசாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மகேஷ்பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படமான இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியிடுகிறார். இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் குறித்த வேலைகள் தயாராகி வருவதாகவும், டீசர் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் ஒரு முக்கிய காட்சியில் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி குறித்த சிறப்பு காட்சி ஒன்று படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
The post ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படத்தில் இடம்பெறும் ஜல்லிக்கட்டு appeared first on tamizlnews.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‘2.0’. இதில் ரஜினி ஜோடியாக எமிஜாக்சன் நடிக்கிறார். வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் நடிக்கிறார்.
லைக்கா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை ரூ.400 கோடி செலவில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இது இந்தியாவில் அதிக செலவில் தயாராகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த படத்தை ரூ.350 கோடிக்கு தயாரிப்பு நிறுவனம் இன்சூரன்ஸ் செய்துள்ளது.
படப்பிடிப்பின் போது ஏற்படும் விபத்துக்கள், உயிர் இழப்பு, படப்பிடிப்பு பொருட்கள் சேதம், செட் சேதம் அடைதல் போன்றவற்றுக்கு இந்த இன்சூரன்ஸ் மூலம் இழப்பீடு பெற முடியும். சமீபத்தில் வேறு சில படங்களுக்காக நடந்த படப்பிடிப்பின் போது, தீவிபத்து, உயிர் இழப்பு போன்றவை ஏற்பட்டுள்ளன. இது போன்ற பிரச்சினைகளால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டவே இந்த படம் இன்சூரன்சு செய்யப்பட்டு இருப்பதாக தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது.
இந்த படத்தில் ஏராளமான ஹாலிவுட் கலைஞர்கள் பணிபுரிகிறார்கள். பிரமாண்ட கிராபிக்ஸ் பணிகள் வெளிநாடுகளில் நடைபெறுகின்றன. 3டி மற்றும் நவீன தொழில் நுட்பத்துடன் ‘2.0’ படம் தயாராகிறது. இதன் 70 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. குறிப்பிட்ட நாளில் ரிலீஸ் செய்தவற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கி விட்டது என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
The post ரஜினியின் ‘2.0’ படத்தை ரூ.350 கோடிக்கு ‘இன்சூரன்ஸ்’ செய்த ஷங்கர் appeared first on tamizlnews.

திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ஜோதிகா, தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா தற்போது ‘மகளிர் மட்டும்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனது அடுத்த படத்தில் பாலா இயக்கத்தில் நடிக்கவுள்ள ஜோதிகா அப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தை பாலாவின் பி ஸ்டுடியோ நிறுவனமும், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளது.
இன்னும் பெயரிப்படாத இப்படத்தில் மிகவும் பிரபலமான கதாநாயகன் நடிப்பார் என கூறப்பட்ட நிலையில், இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக உருவெடுத்துள்ள ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் `புரூஸ் லீ’ படம் மார்ச் 10-ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், அவர் கைவசம் `அடங்காதே’, `4 ஜி’, `ஐங்கரன்’, `சர்வம் தாள மயம்’ உள்ளிட்ட படங்கள் உள்ளன. இந்நிலையில், பாலா இயக்க உள்ள புதிய படத்திலும் ஜி.வி.பிரகாஷ் நடிக்க உள்ளதாக வந்துள்ள புதிய தகவலால் 2017-ல் ஜி.வி.பிரகாஷீக்கு நல்ல திருப்பம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் மார்ச் 1 முதல் துவங்க உள்ள நிலையில், இப்படத்தினை பற்றிய அதிகாரப்பூர்வ செய்திகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post ஜோதிகாவை தொடர்ந்து பாலா படத்தில் இணையும் முன்னணி நடிகர் appeared first on tamizlnews.

விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ் நடித்துள்ள படம் ‘எமன்’. ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை லைக்கா புரொக்‌ஷன் சார்பில் ராஜு மகாலிங்கம், விஜய் ஆண்டனி பிலிம் கார்பரே‌ஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இதில் தியாகராஜன் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். இது குறித்து கூறிய தியாகராஜன்…
“சில வருட கால இடைவேளைக்கு பிறகு நடிக்க முடிவு செய்த நான், என்னுடைய கதாபாத்திரங்களை மிக கவனமாக தேர்வு செய்து வருகிறேன். ஒரு சில கதைகளை கேட்ட உடனே அதில் நடித்தாக வேண்டும் என்று தோன்றும். அப்படி கதை கேட்டதும் என் மனதில் தோன்றிய திரைப்படம் தான் ‘எமன்’.
இது எதிர்பாராத திருப்புமுனைகளை உள்ளடக்கி, முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. ‘எமன்’. இது திரைப்படத்தில் நான் ஒரு முக்கியமான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். நல்ல வலுவான கதையம்சமத்தோடு ஜீவா சங்கர் உருவாக்கி இருக்கும் இந்த ‘எமன்’ படம் மூலம், விஜய் ஆண்டனி நிச்சயம் மேலும் உயரத்தை தொடுவார்” என்றார்.
The post ‘எமன்’ படம் மூலம் விஜய் ஆண்டனி மேலும் உயரத்தை தொடுவார்: தியாகராஜன் appeared first on tamizlnews.

பிரபல பாடல்களின் பல பல்லவிகள் படத் தலைப்பாகியுள்ளன. பிரபல நாவல்களின் தலைப்புகளும் படத்தின் பெயராகியுள்ளன. அதே போல படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசிய வசனங்களும் படத் தலைப்பாகி வருகின்றன.
‘இது எப்படி இருக்கு’, ‘என் வழி தனி வழி’, ‘கதம் கதம்’, ‘போடா ஆண்டவனே நம்ம பக்கம்’ தலைப்புகளைத் தொடர்ந்து ‘முள்ளும் மலரும்’ படத்தில் சூப்பர் ஸ்டார் பேசிய ‘கெட்ட பையன் சார் இந்தக் காளி’ என்ற வசனமும் ‘கெட்ட பையன் சார் இவன்’ என்று படத் தலைப்பாகியுள்ளது.
‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் நட்டிதான் இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தை அறிமுக இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார். இவர் இயக்குநர் ஏ.எல்.விஜய்-யிடம் ‘தாண்டவம்’, ‘தலைவா’, ‘சைவம்’ போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தீபக் கெட்ட பையன் சார் இவன் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
மேலும் இவர் ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘மெல்லத் திறந்தது கதவு’, ‘ராஜாதி ராஜா’ போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவரும் நடிகருமான ஆர். சுந்தர்ராஜனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.எச்..காஷிஃப் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 6 ஃபேஸ் ஸ்டுடியோஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.
The post ரஜினியின் பிரபல வசனத்தை படத்தலைப்பாக்கிய `சதுரங்கவேட்டை’ நாயகன் appeared first on tamizlnews.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் தற்போது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘சிவலிங்கா’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இரண்டு படங்களையும் பிப்ரவரி 17-ந் தேதியே வெளியிடப்போவதாக ஆரம்பத்தில் அறிவித்தனர். ஆனால், ஒருசில காரணங்களால் ‘சிவலிங்கா’ ரிலீஸ் தேதியை மட்டும் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைத்தனர். ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை அதற்கு முன்னதாகவே ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர்.
இந்நிலையில், தற்போது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படமும் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போகிறது. தற்போது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் ரிலீஸ் தேதி இன்னமும் உறுதியாகாத சூழ்நிலையில், ‘சிவலிங்கா’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அதன்படி, வருகிற தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 14-ந் தேதி ‘சிவலிங்கா’ படத்தை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். ‘சிவலிங்கா’ படத்தை பிரபல இயக்குனர் பி.வாசு இயக்கியுள்ளார். ரித்திகா சிங், சக்தி, வடிவேலு, ராதாரவி, பானுப்ரியா, ஊர்வசி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
The post புத்தாண்டில் வெளிவரும் ராகவா லாரன்சின் சிவலிங்கா appeared first on tamizlnews.

சினிமா முறையில் பல்வேறு திறமைகளை உடையவர் நடிகர் தனுஷ் என்பது நாம் அறிந்ததே. நடிகராக அறிமுகமாகிய இவர் பின்னர் பாடகர், பாடலாசிரியர் என தனது திறமைகளை சினிமாவில் வெளிக்கொணர்ந்தார். அதனைத் தொடர்ந்து படங்களை தயாரிக்கவும் செய்தார்.
இந்நிலையில், தனுஷ் தற்போது ராஜ்கிரணை வைத்த `பவர்பாண்டி’ என்ற புதிய படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 14 (தமிழ் புத்தாண்டு) அன்று வெளியாகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படத்திற்கான டப்பிங் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது,
`பவர்பாண்டி’ படத்தின் டப்பிங் வேலைகள் தொடங்கியுள்ளன. மிகவும் சிலிர்ப்பாகவும், உற்சாகமாகவும் இருப்பதை உணர்கிறேன் என்று குறிப்பிட்டுள்ள தனுஷ், சீன் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வரும் மார்ச் 9-ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார்.
`பவர்பாண்டி’ படத்தில் நதியா, பிரசன்னா, சாயாசிங், வித்யூ ராமன், டெல்லி கணேஷ், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் தனுஷ், மடோனா செபாஸ்டின், கவுதம் மேனன், திவ்யதர்ஷினி நடித்துள்ளனர். இயக்குநர், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
The post `பவர்பாண்டி’ படத்தின் 2 முக்கிய தகவல்களை வெளியிட்ட தனுஷ் appeared first on tamizlnews.

கடந்த சில தினங்களாக பின்னணி பாடகி தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய டுவிட்டுகளை பதிவு செய்து வந்தார். அதில், அவர் தனுஷின் ஆட்களால் தான் காயம்பட்டதாகவும், தன்னுடைய கணவரை பிரிந்துவிட்டதாகவும் ஏகப்பட்ட டுவிட்டுகளை பதிவு செய்து வந்தார்.
அவரது டுவிட்டர் கணக்கு யாராலும் முடக்கப்பட்டதா? என்ற சந்தேகமும் ஒருபக்கம் எழுந்தது. ஆனால், சுசித்ரா அதுவும் இல்லை என்பதுபோல் மேலும் மேலும் டுவிட்டுகளை பதிவு செய்துகொண்டே இருந்தார். இதுகுறித்து சுசித்ராவிடம் விளக்கம் கேட்க அவரை தொடர்புகொள்ள முயன்றபோது அவரது தொலைபேசி அழைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், நடிகரும், சுசித்ராவின் கணவருமான கார்த்திக், சுசித்ராவின் டுவிட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, கடந்த சில தினங்களாக சுசித்ரா பதிவு செய்ததாக சில டுவிட்டுகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது.
இது அனைத்தும் சுசித்ரா பதிவு செய்தது அல்ல. அவரது டுவிட்டர் கணக்கு சிலபேரால் முடக்கப்பட்டது. தற்போது அவருடைய டுவிட்டர் கணக்கை திரும்ப பெற்றுவிட்டோம். சுசித்ரா பதிவு செய்த டுவிட்டுகள் சிலபேருக்கு மனவலியை கொடுத்திருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post சுசித்ராவின் சர்ச்சைக்குரிய டுவிட்டுகளுக்கு கணவர் கார்த்திக் விளக்கம் appeared first on tamizlnews.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால்-மீரா ஜாஸ்மின் நடிப்பில் மிகப்பெரிய ஹிட்டான படம் `சண்டக்கோழி’. கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்பத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது.
`சண்டக்கோழி’ படத்திற்கு பிறகு இயக்குநர் லிங்குசாமி – விஷால் கூட்டணி `சண்டக்கோழி 2′-ஆம் பாகம் மூலம் மீண்டும் இணைய உள்ளது. இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் துவங்குவற்குள்ளே பல்வேறு பிரச்சனைகளால் இப்படத்தின் பணிகள் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி இப்படத்திற்கான பணிகள் பூஜையுடன் விரைவில் துவங்க உள்ள நிலையில், இயக்குநர் லிங்குசாமி, அல்லு அர்ஜுனை வைத்து தமிழ், தெலுங்கில் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதனால் `சண்டக்கோழி 2′ படம் மீண்டும் தள்ளிப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில், இந்த தகவல் குறித்து லிங்குசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது,
அடுத்த படத்தில் விஷாலுடன் மீண்டும் இணைந்து `சண்டக்கோழி 2′-வை இயக்க உள்ளேன். அதன் பிறகு உடனடியாக அல்லு அர்ஜுன் படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இப்படத்தை கே.இ.ஞானவேல்ராஜா-வின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
இயக்குநர் லிங்குசாமி இயக்கதில் சூர்யா நடித்து கடைசியாக வெளியான `அஞ்சான்’ படம் போதிய வரவேற்பை பெறாததால் நீண்ட இடைவேளைக்குப் பிறகு `சண்டக்கோழி 2′ படத்தை லிங்குசாமி இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post `சண்டக்கோழி 2′: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த லிங்குசாமி appeared first on tamizlnews.


IlamaiFM

Current track
TITLE
ARTIST