Cinema

Page: 2

ஆர்யா தற்போது ‘மஞ்சப்பை’ இயக்குனர் ராகவன் இயக்கத்தில் ‘கடம்பன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஆர்யா முதன்முறையாக பழங்குடி இனமக்களுடன் இணைந்து, காட்டுவாசியாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், தாய்லாந்து காடுகளில் படமாக்கப்பட்டது. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’, ‘கதகளி’ உள்ளிட்ட படங்களின் நாயகி கேத்ரீனா தெரசா நடித்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் படப்படிப்பிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் முடிந்துவிட்டது. தற்போது, இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையில், பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளதாகவும் தெரிகிறது.
இப்படத்தை, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில், ஆர்.பி.சவுத்ரி தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தை பிப்ரவரியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post யானைப்படையுடன் விரைவில் வெளியாகிறான் `கடம்பன்’? appeared first on tamizlnews.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹிடாரி நடிப்பில் உருவாகி வரும் ‘காற்று வெளியிடை’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படத்தைத் தொடர்ந்து, `சதுரங்க வேட்டை’ இயக்குநர் வினோத் இயக்கத்தில் `தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட உள்ள இப்படத்தில், கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
‘மாயா’ படத்தின் ஒளிப்பதிவாளர் சத்யா இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். ‘சிறுத்தை’ படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ள கார்த்தி இப்படத்திற்காக காவல்துறை சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 17ம் தேதி துவங்க உள்ளது.
The post உண்மை சம்பவத்திற்காக போலீஸ் பயிற்சி எடுக்கும் கார்த்தி! appeared first on tamizlnews.

கதாநாயகர்கள், தங்கள் படங்களில் உடம்பை ஏற்றியும் இறக்கியும் முகத்துக்கு ‘மேக்கப்’ போட்டு வித்தியாசப்படுத்தியும் கஷ்டப்பட்டு நடித்து ரசிகர்களை கவர்வது உண்டு. கதாநாயகிகள் காதல் காட்சிகளுக்கும் பாடல் காட்சிகளில் அரைகுறை ஆடைகளில் வந்து நடனம் ஆடுவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டனர்.
ஆனால் அந்த நிலைமைகள் தற்போது மாறி வருகிறது. முன்னணி கதாநாயகிகள் தங்களுக்கும் கதாநாயகர்களுக்கு இணையாக கதைகளில் முக்கியத்துவம் கேட்கிறார்கள். அதற்கு வாய்ப்பு இல்லாத படங்களை உதறித்தள்ளுகிறார்கள். புதுமுக நடிகர்கள் படங்களில் தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் கூட அவர்களுடன் நடிக்க தாராளமாக ஒப்புக்கொள்கிறார்கள்.
இதனால் பெரிய கதாநாயகர்கள் புதிதாக வரும் இளம் கதாநாயகிகளுடன் ஜோடி சேர்ந்து அவர்களை காதல் காட்சிகளுக்கு பயன்படுத்தும் நிலைமை இருக்கிறது.
இப்படி பெரிய கதாநாயகர்களை ஒதுக்கி விட்டு தங்கள் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடிப்பிடித்து நடிக்கும் நடிகைகள் பட்டியலில் நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, ஸ்ரேயா ஆகியோரை பார்க்க முடிகிறது.
நயன்தாரா, ‘மாயா’ படத்தில் பேயாகவும், ‘நானும் ரவுடிதான்’ படத்தில் காதுகேட்காத பெண்ணாகவும் வந்து திறமை காட்டினார். தற்போது டோரா, இமைக்கா நொடிகள், கொலையுதிர்காலம் ஆகிய திகில் படங்களில் நடித்து வருகிறார். அறம் என்ற படத்தில் துணிச்சலான கலெக்டர் வேடம் ஏற்றுள்ளார். இந்த படங்கள் எதிலும் பெரிய கதாநாயகர்கள் இல்லை என்பது விசேஷம்.
அனுஷ்கா அருந்ததி படத்திலேயே திறமையை வெளிப்படுத்தினார். இஞ்சி இடுப்பழகியில் உடல் எடையை மேலும் இருபது கிலோ ஏற்றி குண்டு பெண்ணாகவும் ருத்ரமாதேவி, பாகுபலி படங்களில் வாள் வீசி ஆண்கள் தலைகளை கொய்யும் ராணியாகவும் வந்து அசத்தினார். தற்போது திருப்பதி வெங்கடேச பெருமாள் மகிமைகளை மையப்படுத்தி தயாராகும் பக்தி படமான ‘ஓம்நமோ வெங்கடேசாய’ படத்தில் கிருஷ்ணம்மா என்ற பெண் பக்தை வேடத்தில் வருகிறார். பாகுபலி இரண்டாம் பாகத்தில் ராணியாக நடிக்கிறார்.
திரிஷா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளித்து எடுக்கப்படும் மோகினி என்ற திகில் படத்திலும், சதுரங்க வேட்டை இரண்டாம் பாகத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார். அடுத்து மும்பை தாஜ் ஓட்டலில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலை மையப்படுத்தி உருவாகும் ‘1818’ என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் பயங்கரவாதிகளுடன் ஆக்ரோஷமாக மோதி அவர்கள் பிடியில் பணயக்கைதிகளாக இருக்கும் அப்பாவி மக்களை மீட்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஸ்ரேயா கவுதமி புத்ர சதாகர்னி என்ற படத்தில் ராணி வேடத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. வினியோகஸ்தர்களும் இவற்றை வாங்கி வெளியிட ஆர்வம் காட்டுகிறார்கள்.
The post வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கும் நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, ஸ்ரேயா appeared first on tamizlnews.

கட்டாய விடுமுறை தினங்கள் பட்டியலில் இருந்து பொங்கல் திருநாளை நேற்று மத்திய அரசு நீக்கியது. நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல என்றும், பொங்கல் திருநாளை கொண்டாடுபவர்கள் மட்டும் விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனால், மத்திய அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் இத்தகைய செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷீம் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழ்நாடு இந்தியாவில் தான் உள்ளதா? என்று கேள்வி எழுப்பி, தனது கண்டத்தை தெரிவித்துள்ளார்.
The post மத்திய அரசுக்கு எதிராக களமிறங்கிய ஜி.வி.பிரகாஷ்! appeared first on tamizlnews.

ரஜினி தற்போது ஷங்கரின் ‘2.ஓ’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் முன்னதாக வெளியான `எந்திரன்’ மிகப்பெரும் வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அதன் அடுத்த வெர்ஷனாக `2.0′ என்ற படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சனும், வில்லனாக பாலிவுட் பிரபலம் அக்‌ஷய் குமாரும் நடித்து வருகிறார்.
இப்படத்திற்கு பிறகு ரஜினி, மீண்டும் கபாலி இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
இந்தப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. ரஜினி-பா.ரஞ்சித் கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான ‘கபாலி’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்தப்படத்தின் மீதும் ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் ரஜினி மீண்டும் டானாக நடிக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது.
`கபாலி’ படத்தில் மலேசியா டானாக வந்த ரஜினி இந்த படத்தில் மும்பை டானாக வருகிறாராம்.
மும்பையில் உள்ள குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கு ஆதரவாக போராடும் ஒருவராக ரஜினி நடிக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதற்காக சில நாட்களுக்கு முன்னர், மும்பை சென்ற பா.ரஞ்சித் படப்பிடிப்பிற்கான இடங்களை தேர்வு செய்துள்ளார். ஏற்கனவே ரஜனி `பாட்ஷா’ படத்தில் மும்பை டானாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
The post மீண்டும் மும்பையில் டானாகும் ரஜினி! appeared first on tamizlnews.

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக உள்ள கவுதம் மேனன், விக்ரமுடன் இணைந்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தை இயக்கி வருகிறார்.
கவுதம் மேனனின் கனவு படமான இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கியுள்ள நிலையில், அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. மேலும் தினமும் ‘துருவ நட்சத்திரம்’ குறித்த ருசீகர தகவல் டுவிட்டரில் வெளியிடப்படும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த வாரத்தில், கவுதம் மேனன் – ‘பிரேமம்’ புகழ் நிவின் பாலியும் புதிய படத்தில் இணைய உள்ளதாக தகவல் பரவி வந்தது. இதற்காக கவுதம், நிவினிடம் கதை கூறியதாகவும், இதில் நிவின் பாலி இருவேடத்தில் நடிக்கவிருப்பதாகவும், நிவினுக்கு வில்லனாக விக்ரமை நடிக்க வைக்க கவுதம் முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் பரவி வந்தன.
இந்த தகவலுக்கு கவுதம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, விக்ரம்-நிவின்பாலியை வைத்து நான் புதிய படம் ஒன்றை இயக்கப்போவதாக வெளிவந்த செய்திகள் அனைத்தும் வதந்தியே. நான் தற்போது ‘துருவ நட்சத்திரம்’ பட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன்.
அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 4 மொழிகளில் தனித்தனியாக படங்களை எடுக்க முடிவு செய்துள்ளேன். மலையாளத்தில் பிரித்விராஜ், கன்னடத்தில் புனித் ராஜ்குமார் ஆகியோரை வைத்து இயக்கவுள்ளதாகவும், தமிழில் ஜெயம் ரவி, தெலுங்கில் தருண் தேஜா ஆகியோரை வைத்து இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
The post நிவின் பாலி – விக்ரம் கூட்டணி குறித்து மனம் திறந்த கவுதம் மேனன்! appeared first on tamizlnews.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தமிழகமெங்கும் பொதுமக்களின் ஆதரவு பெருகி வரும் நிலையில், பிரபலங்களும் சினிமா நட்சத்திரங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. தமிழர்களின் மரபுசார்ந்த விளையாட்டிற்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற இளைஞர்கள் பேரணியில் பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். மேலும் இயக்குநர் அமீர், விக்ரமன், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
மேலும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான கமலஹாசன், சூர்யா, ஜி.வி.பிரகாஷ், ஹிப் ஹாப் தமிழா ஆதி உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், வளர்ந்து வரும் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் “ஏறுதழுவுதல் எம் தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு.. அதை மீட்க விரும்பும் பல கோடி பேரில் ஒரு தமிழனாய் நானும்” என்று தெரிவித்துள்ளார்.
The post ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பல கோடிபேரில் ஒரு தமிழனாய் சிவகார்த்திகேயன் appeared first on tamizlnews.

கமலுடன் 13 ஆண்டுகள் வாழ்ந்த கவுதமி சமீபத்தில் கமலை விட்டு பிரிந்தார். ஆனால் அதற்கான காரணம் எதையும் கூறவில்லை. ‘எனது மகள் சுப்புலட்சுமிக்கு நல்ல தாயாக இருக்க விரும்புகிறேன்’ என்று மட்டும் கூறி இருந்தார்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்தபோது, அதில் சந்தேகம் இருப்பதாகவும், அதுபற்றிய உண்மையை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு கவுதமி கடிதம் எழுதினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது கடிதத்துக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கவுதமி ஒரு பண்பலை வானொலியில் பேட்டி அளிக்க சென்றார். அவரிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி, “நீங்கள் ஏன் உலகநாயகன் கமல்ஹாசனை பிரிந்தீர்கள்?” இதை கேட்ட உடனே கவுதமி லேசாக கோபப்படத் தொடங்கினார்.
அடுத்து, “ முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது விளம்பரம் தேடத்தானே?” என்று கேட்டது தான் தாமதம், ஆவேசம் அடைந்த கவுதமி கோபம் அடைந்து பாதியிலேயே பேட்டியை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.
The post ஜெயலலிதா மரணம் பற்றி பிரதமருக்கு எழுதிய கடிதம் குறித்து கேட்டதால் பாதியில் பேட்டியை முடித்த கவுதமி appeared first on tamizlnews.

சினிமா, அரசியல், சின்னத்திரை என்று இப்போதும் சுறுசுறுப்பாக வலம் வருபவர் குஷ்பு. அடுத்து, விரைவில் நடைபெற இருக்கும் தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தலிலும் போட்டியிட தயாராகி வருகிறார்.
சுந்தர்.சி தனக்கு கணவராக அமைந்ததால்தான், தெம்பாக இருப்பதாக குஷ்பு தெரிவித்து இருக்கிறார். சுந்தர். சி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள குஷ்பு…
‘என் நிஜ வாழ்க்கை ஹீரோ… என் சிறந்த நண்பர்… நாங்கள் இருதுருவங்கள் என்றாலும் எனது ஆத்ம துணையாக இருக்கிறார்… அவர் என்னவராக இருப்பதால்தான் தெம்பாக இருக்கிறேன்… என் இனிய கணவர் அவர்…’ என்று தெரிவித்து இருக்கிறார்.
The post சுந்தர்.சியால் தெம்பாக இருக்கிறேன்: குஷ்பு appeared first on tamizlnews.

ரம்யா நம்பீசன் தற்போது ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா’, சிபிராஜுடன் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். அவ்வப்போது பின்னணி பாடல்களையும் பாடி வருகிறார்.
மலையாளத்தில் பல பாடல்கள் பாடியிருக்கும் ரம்யாநம்பீசன், தமிழில் ‘பாண்டியநாடு’ படத்தில் லட்சுமிமேனனுக்காக டி.இமான் இசையில் பாடிய ‘பை… பை… பை… கலாசி பை…’ பாடல் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
பின்னர் ‘டமால் டுமீல்’, ‘சகாப்தம்’, ‘சகலகலாவல்லவன்’ படங்களிலும் பாடினார். தற்போது ‘சதுரங்க வேட்டை-2’ படத்தில் முன்னணி வேடத்தில் நடித்து வரும் திரிஷாவுக்காக ஒரு பாடலை ரம்யா நம்பீசன் பாடி இருக்கிறார்.
அஸ்வமித்ராவின் இசையில் அவர் இந்த பாடலை பாடி இருக்கிறார். இந்த தகவலை இதன் தயாரிப்பாளர் மனோபாலா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
The post திரிஷாவுக்கு பின்னணி பாடிய ரம்யா நம்பீசன் appeared first on tamizlnews.


IlamaiFM

Current track
TITLE
ARTIST