Cinema

Page: 3

தீபாவளி திருநாளை நேற்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர். திரையுலக பிரபலங்களும் தீபாவளி திருநாளை தங்கள் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தீபாவளி திருநாளை குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்வதற்காக சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த ரஜினி, தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு சென்னை திரும்பினார்.
நேற்று தீபாவளி தினத்தன்று தனது மருமகன் தனுஷ், மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா மற்றும் பேரன் பேத்திகள் அனைவரையும் தனது வீட்டுக்கு வரவழைத்து அவர்களுடன் சந்தோஷமாக கொண்டாடியுள்ளார். பேரன், பேத்தி, மகள்கள், மருமகனுடன் மத்தாப்பு கொளுத்தியும் தீபாவளி திருநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
அதேபோல், கமல் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து இந்த தீபாவளி திருநாளை கொண்டாடியுள்ளார். இதேபோல், மற்ற திரையுலக பிரபலங்களும் தங்களது குடும்பத்துடன் தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
The post மகள்கள், பேரன், மருமகனுடன் தீபாவளியை கொண்டாடிய ரஜினி appeared first on tamizlnews.

சுசி கணேசன் இயக்கத்தில் ஜீவா, சோனியா அகர்வால், அப்பாஸ் மற்றும் மாளவிகா நடிப்பில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய படம் ‘திருட்டுப்பயலே’. இப்படம் வர்த்தக ரீதியாகவும் வெற்றிபெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக சுசி கணேசன் அறிவித்திருந்தார்.
முதல் பாகத்தில் ஜீவா நடித்திருந்த கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹாவும், அப்பாஸ் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடிக்கவிருப்பதாகவும் கூறியிருந்தார். முதல்பாகத்தில் மாளவிகாவின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்ட நிலையில், அந்த கதாபாத்திரத்தில் எந்த நடிகையை நடிக்க வைக்கலாம் என்பது குறித்து சுசி கணேசன் நீண்ட ஆலோசனையில் இருந்தார்.
இந்நிலையில், மாளவிகா கதாபாத்திரத்தில் அமலாபால் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அமலாபால் வசம் தற்போது ‘வடசென்னை’ என்ற ஒரு படம் மட்டுமே கைவசம் உள்ளது.
இந்நிலையில், வருகிற வாய்ப்பை உதறவேண்டாம் என்ற நிலையில், இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பார் என்று கூறப்படுகிறது. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது.
The post திருட்டு பயலே இரண்டாம் பாகத்தில் அமலாபால் appeared first on tamizlnews.

நடிகர் சிவகுமாரின் பிறந்தநாளையொட்டி அவர் வரைந்த ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. இதன் நிறைவு நாளில், மூத்த பத்திரிகையாளர்களை மேடைக்கு வரவழைத்து பேசவைத்தனர். அப்போது, பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பேசும்போது,
நான் போலீஸ் வேலை வேண்டாம் என்று உதறித்தள்ளிவிட்டு பத்திரிகை துறைக்கு வந்தவன். சிவகுமாரின் திருமண செய்தியை எடுத்த பெருமை எனக்கு உண்டு. அதேசமயம், சிவகுமாரால் நான் ஒருமுறை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரிடம் ஒரு அறை வாங்கியுள்ளேன். அதற்கு என்ன காரணமென்றால், அந்த நேரத்தில் சிவகுமார் வீட்டில் துக்கமான காரியம் ஒன்று நடந்தது. அதைப்பற்றிய செய்தியை ஒன்றை பத்திரிகையில் போட்டேன்.
அவ்வளவுதான், திடீரென்று எம்.ஜி.ஆரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. வழக்கம்போல் சத்யா ஸ்டுடியோவுக்கு சென்றேன். எனக்கு முன்னால் சிவகுமார், எம்.ஜி.ஆர் அறைக்குள் சென்றார். அவர் பின்னாலேயே நானும் சென்றேன். உள்ளே சென்றதும், கதவை சாத்திவிட்டு எம்.ஜி.ஆர். அவர்கள் என்னுடைய கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டார்.
யாரைக் கேட்டு இந்த செய்தியை போட்டாய் என்று கேள்வி கேட்டார். நாளைக்கே அந்த செய்திக்கு மறுப்பு போடு என்று சொன்னார். அந்த சம்பவத்தை நான் என் வாழ்நாளில் கடைசி வரைக்கும் மறக்கவே மாட்டேன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மட்டுமல்ல, அவருக்கு பின்னால் சில விஷயங்களில் நான் சிவகுமாரின் தொண்டன்.
நான் 25 வருடத்துக்கு முன்பே, நம்பியாரும், சிவகுமாரும் கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதை பார்த்திருக்கிறேன். அதை பின்பற்றி இன்றுவரைக்கும் காலையில் 5 மணிக்கெல்லாம் எழுந்து நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறேன். அவர் சொன்ன பல பழக்க வழக்கங்களை நான் பின்பற்றி வருகிறேன்.
இன்னொரு முக்கியமான விஷயம், என்னுடைய மகள் திருமண விழாவிற்கு எந்த நடிகரையும் அழைக்கவில்லை. சிவகுமாருக்கு மட்டும்தான் அழைப்பு விடுத்தேன்.
அழைப்பு விடுக்கச்சென்ற என்னை அமரவைத்து அரை மணி நேரம் உரையாடினார். அவருடன் நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். நான் பார்த்தவகையில் நிறைய விஷயங்களை பேசுகிற ஒரே நடிகர் சிவகுமார்தான். அவரிடம் மாட்டிக்கொண்டால் நிறைய விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்வார்.
பத்திரிகையாளர்களிடமும் சரி, மற்றவர்களிடமும் சரி மனம் திறந்து பேசக்கூடிய ஒரே நடிகர் சிவகுமார்தான். நான் எல்லா நடிகர்களை பற்றியும் கிசுகிசுக்கள் எழுதியிருக்கிறேன். ஆனால், கிசுகிசுக்களில் சிக்காத ஒரே நடிகர் சிவகுமார்தான்.
அவருடைய இரண்டு மகன்களுக்கும் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய மகன் கல்யாணத்திற்கு அவர்கள் அலுவலகத்திற்கு சென்று அழைப்பிதழ் கொடுத்தேன். அப்போது அந்த அலுவலகத்தில் இருந்தவர்கள் என்னிடம் சரியாக நடந்துகொள்ளவில்லை. இந்த விஷயத்தில் சிவகுமாரின் இரண்டு மகன்களும் அவர்களது அப்பாவை பின்பற்றவேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.
அதேபோல், மீடியாவை பகைத்துக் கொண்ட எந்த கலைஞனும் அடுத்தக்கட்டத்திற்கு போனதே கிடையாது. இதை, எழுதி வைத்துக் கொள்ளுங்கள். மீடியாவில் எந்த துறையாக இருந்தாலும் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை சரியாக கொடுங்கள்.
சிவகுமார் அவர்கள் மூன்று முதல்வர்களின் அன்பையும் பெற்றவர். அரசியல் சார்பில்லாத ஒரு நல்ல மனிதனாக சிவகுமாரை ரொம்பவும் எனக்கு பிடிக்கும் என தனது பேச்சை முடித்தார்.
The post மீடியாவை பகைத்துக்கொண்ட கலைஞர்கள் அடுத்தக்கட்டதிற்கு போகமுடியாது: பயில்வான் ரெங்கநாதன் appeared first on tamizlnews.

நடிகர், இயக்குனர், நடன இயக்குனர், சமூக அக்கறை கொண்டவர் என பன்முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ். அவருக்கு நேற்று பிறந்தநாள். தீபாவளியும், அவருடைய பிறந்தநாளும் ஒரே நாளில் வந்தது அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இருப்பினும், அவர் இந்த வருட பிறந்தநாளை சில காரணங்களுக்காக கொண்டாடவில்லை.
இருப்பினும், தீபாவளியை ஆதவற்ற குழந்தைகளுக்காக இவர் நடத்திவரும் ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, என்னுடைய பிறந்தநாளும், தீபாவளியும் ஒரேநாளில் வந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது.
என்னுடைய ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளின் சந்தோஷத்திற்காக இந்த தீபாவளியை ஆசிரமத்தில் வசிக்கும் குழந்தைகளுடன் கொண்டாடினேன். ஆனால், என்னுடைய பிறந்தநாளை கொண்டாடவில்லை என்று கூறியுள்ளார்.
ராகவா லாரன்ஸ், அப்துல் கலாம் பெயரில் அறக்கட்டளை தொடங்கி அதன்மூலம் மேற்படிப்பு படிக்க முடியாத ஏழை, எளிய மாணவர்களின் படிப்பு செலவுக்கு உதவி வருகிறார்.
அதேபோல், தனது அம்மாவுக்கும், அவர் வழிபடும் ராகவேந்திரருக்கும் கோயில் கட்டி வருகிறார். ஊனமுற்ற பலருக்கும் டான்ஸ் கற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்க்கையும் மேம்பட வழிவகை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளின் சந்தோஷத்துக்காக தீபாவளி கொண்டாடிய ராகவா லாரன்ஸ் appeared first on tamizlnews.

சிம்பு நடிப்பில் நீண்டகாலமாக உருவாகி வரும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்கு பிறகு சிம்பு-கவுதம் வாசுதேவ் மேனன் இருவரும் இணைந்திருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் எல்லாம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், படம் எப்போது வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, வருகிற நவம்பர் 11-ந் தேதி ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிம்புவுக்கு இந்த வருடம் ஏற்கெனவே ‘இது நம்ம ஆளு’ படம் வெளிவந்துள்ளது. தற்போது இந்த வருடம் அவரது கணக்கில் மேலும் ஒன்று இணைந்துள்ளது.
The post சிம்புவின் அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி அறிவிப்பு appeared first on tamizlnews.

சிம்பு நடிப்பில் ‘அச்சம் என்பது மடமையடா’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்திலும் மூன்று கெட்டப்புகளில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் சிம்பு பேசியதை கீழே பார்ப்போம்.
நிறைய பேர் சிம்பு சூப்பர் ஸ்டாராக ஆவதற்கு முயற்சி பண்ணுறார்னு தப்பு தப்பா பேசுறாங்க. நான் எதற்கும் முயற்சி எடுக்கவே இல்லை. நான் இந்த சினிமாவுலேயே இல்லைன்னு வச்சுங்கங்க. எனக்கு இந்த சினிமாவே வேண்டாம். நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா என்ற போட்டி வேண்டாம்.
யாரு வேண்டுமானலும் சூப்பர் ஸ்டார் ஆகட்டும். நீங்க யாரை வேணும்னாலும் தலையில வச்சு கொண்டாடுங்க. யாருக்கு வேணும்னாலும் கைதட்டுங்கள். எனக்கு அதைப்பற்றியெல்லம் கவலை கிடையாது.
நான் சினிமாவுல நடிக்கிறது ஒரே காரணம், ஒருத்தன் 3 வருஷம் படம் பண்ணாவிட்டாலும் சரி, நீ வருவடா, உனக்காக நாங்க இருப்போம்டான்னு வந்து நின்னார்களே என்னுடைய ரசிகர்கள், அவர்களுக்காக மட்டும்தான் நான் மத்தவங்க பேசறதையெல்லாம் பரவாயில்லையின்னு சகிச்சுக்கிட்டு நடிச்சுக்கிட்டு இருக்கிறேன். இல்லையென்றால், எனக்கு இந்த சினிமாவே தேவையில்லை.
என்னுடைய கனவு, இலட்சியம், வாழ்நாளில் நான் சாதிக்கவேண்டும் என்று நினைக்கிற ஒரு விஷயம் உண்டு. அது என்னவென்றால், இந்த உலகத்தில் எந்த மூலையில் ஒரு குழந்தை பிறந்தாலும், அந்த குழந்தை பிறக்கும்போது அந்த குழந்தைக்கு நல்ல சாப்பாடு கிடைக்கவேண்டும். அடுத்தபடியாக நல்ல கல்வி, இருப்பதற்கு நல்ல இடம், எல்லாவிதமான சிகிச்கைகளும் அளிக்ககூடிய நல்ல மருத்துவமனை, எந்தவித டென்ஷலும் இல்லாத பாதுகாப்பு இந்த ஐந்து விஷயமும் கிடைக்க வேண்டும்.
இந்த விஷயங்களுக்கெல்லாம் சிம்புவும் ஒரு காரணமாக இருந்தான் என்ற நிலைமை என்றைக்கு வருகிறதோ அன்றைக்குத்தான் நான் சூப்பர் ஸ்டார். இந்த உலகத்தை விட்டு நாம் செல்லும்போது, எதையும் எடுத்துவிட்டு போகமுடியாது, அனால், கொடுத்துவிட்டு போகலாம்.
நான் கொடுத்துவிட்டு போகணும்னு நினைக்கிறேன். நான் பெருமைப்படுவது, மதிப்பது என்னுடைய ரசிகர்களை மட்டும்தான் என்றார்.
The post சிம்பு தனது வாழ்நாளில் சாதிக்க விரும்பும் ஐந்து விஷயங்கள் appeared first on tamizlnews.

சினிமாவின் ஆரம்ப காலத்தில் இருந்தே தமிழ் சினிமாவிற்கும் கேரளாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா முதல் தற்போதைய மஞ்சிமா மோகன் வரை பல நடிகைகள் கேரளாவில் இருந்து வந்தவர்கள்தான்.
அந்த வரிசையில் தற்போது சனா அல்தாப் என்ற மலையாள நடிகை தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். இவர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘சென்னை 28 II’ படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். 17-வயதே நிரம்பிய சனா அல்தாப், கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சனா அல்தாப் கூறும்போது, என்னுடைய பொது தேர்வினால் நான் சில மாதங்கள் நடிப்பில் இருந்து விலகி இருக்கும் சூழ்நிலை இருந்தது. அதன் காரணமாக என்னால் நடிப்பில் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை. ஆனால் வெங்கட் பிரபு சார் எனக்கு அளித்த தன்னம்பிக்கையும், ஊக்குவித்தலும், என்னை மீண்டும் நடிப்பில் களம் இறக்கியது.
இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கும் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் அனுராதா. வெறும் கவர்ச்சி மூலம் படத்தை ஒப்பேற்றும் ஒரு சாதாரண கதாபாத்திரமாக இல்லாமல், கதை களத்தை மேற்கொண்டு நகர்த்தக்கூடிய வலுவான வேடமாக என்னுடைய கதாபாத்திரம் அமைந்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது.
ஆரம்பத்தில் தமிழ் எனக்கு சிறிது கடினமாக இருந்தாலும், வெங்கட் பிரபு சார் எனக்கு கொடுத்த முறையான பயிற்சி அந்த கஷ்டத்தை எளிதாகி விட்டது. கலைஞர்களுக்கு சிறந்த ஆசானாக திகழ்பவர் வெங்கட் பிரபு சார். தமிழ் திரையுலகில் முதல் முறையாக காலடி எடுத்து வைக்கும் எனக்கு, நிச்சயமாக ‘சென்னை – 28 – II’ திரைப்படம் சிறந்ததொரு அடித்தளமாக அமையும் என்றார்.
இப்படத்தை ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’ சார்பில் வெங்கட் பிரபு தயாரித்து, இயக்கி இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
The post கிரிக்கெட் படத்தில் கராத்தே வீராங்கனை appeared first on tamizlnews.

சமீபத்தில் சிவகுமாரின் பிறந்தநாளையொட்டி அவர் வரைந்த ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. இந்த கண்காட்சியின் நிறைவு நாளில் சூர்யா, கார்த்தி இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அப்போது, மேடையில் மூத்த பத்திரிகையாளர்களை பேச அழைத்தனர்.
அப்போது பேசிய பயில்வான் ரெங்கநாதன் தனது மகளின் திருமணத்திற்கு சூர்யா அலுவலகத்திற்கு பத்திரிகை கொடுக்கச் சென்ற தன்னை யாரும் சரியாக நடத்தவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு மன்னிப்பு கேட்கும்விதமாக அதேமேடையிலேயே சூர்யா பேசும்போது, முதலில் நான் பயில்வான் அண்ணன் பேச்சுக்கு விளக்கம் கொடுக்க விரும்புகிறேன். நீங்கள் சொன்ன விஷயம் இதுவரை என்னுடைய காதுகளுக்கு வரவில்லை.
இருப்பினும் இந்த மேடையில் அந்த விஷயத்தை பதிவு செய்ததற்கு நன்றி. நிச்சயமாக நாங்கள் அதை திருத்திக் கொள்கிறோம். அப்பாவிடம் இருந்து நாங்கள் கற்றுக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிற விஷயங்கள் அவருடைய உறவுகள்தான். மற்றவர்களுக்கு அவர் மதிப்பு கொடுக்கிற விஷயங்களைத்தான் முதன்மையாக பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறோம்.
அந்த மாதிரி ஒரு விஷயம் நடந்திருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நானும், என்னுடைய அலுவலகத்தை சேர்ந்தவர்களும் அதை திருத்திக் கொள்கிறோம் என்றார்.
The post பொதுமேடையில் மன்னிப்பு கேட்ட சூர்யா appeared first on tamizlnews.

மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி சில நாட்களுக்கு முன் மதுரை வந்து விட்டு டெல்லி திரும்புவதற்காக மதுரை ரெயில்நிலையத்தில் காத்திருந்தார். அப்போது, ரெயில்நிலையத்தில் தகவல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. வழக்கமாக அறிவிப்புக்கு இடையே, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை ஒலிக்கப்படுவது வழக்கம்.
உமாபாரதி ரெயிலுக்காக காத்திருந்தபோது, இந்த பின்னணி இசை ஒலிக்கப்பட்டது. இதை ரசித்துக் கேட்ட அவர் சொக்கிப்போனார். உடனடியாக அந்த இசையை எனக்கு அனுப்பி வையுங்கள் என்று ரெயில்வே அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார்.
அந்த நேரம் பார்த்து ரெயில் வந்துவிடவே அவர் ரெயிலில் ஏறிச் சென்றுவிட்டார். டெல்லி போய்ச்சேர்ந்த அவர், மதுரையில் தான் விரும்பிக்கேட்ட அந்த இசை அடங்கிய குறுந்தகடை தனக்கு அனுப்பி வைக்குமாறு மதுரை கோட்ட ரெயில்வே மேலாளரிடம் கேட்டார். ஆனால், அவர் எந்த இசையை விரும்பி கேட்டார் என்பது ரெயில்வே அதிகாரிகளுக்கு தெரியவில்லை.
தகவல் அறிவிப்பை பொறுத்தமட்டில், தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. மதுரை ரெயில்நிலையத்தில் உள்ள தகவல் மைய துணை ரெயில்நிலைய மேலாளரே தகவல் அறிவிப்புக்கும் பொறுப்பாவார். அவர் ஒரு குறிப்பிட்ட இசையை மட்டும் பதிவிறக்கம் செய்து மந்திரிக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால், தான் கேட்டு ரசித்த இசை இதுவல்ல என்று உமாபாரதி தெரிவித்துவிட்டாராம். இந்த சூழ்நிலையில் மத்திய மந்திரியை ஈர்த்த இசையைத் தேடி கடந்த 3 நாட்களாக அலைமோதி வந்த மதுரை கோட்ட ரெயில்வே வர்த்தக பிரிவு அதிகாரிகள் அறிவிப்பு மையத்தில் இருந்த இசை குறுந்தகடுகள் அனைத்தையும் பதிவு செய்து மந்திரிக்கு நேற்று அனுப்பி வைத்தனர்.
இதன் மூலம் மத்திய மந்திரியை கவர்ந்த ‘இசைப்புயல்’ விவகாரம் மதுரை ரெயில்வே வட்டாரத்தில் நேற்று அடங்கியது.
The post மத்திய மந்திரியை ஈர்த்த ஏ.ஆர். ரகுமானின் இசை appeared first on tamizlnews.

நடிகர் சிவகுமாரின் 75-வது பிறந்தநாள் விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
விழாவின்போது சிவகுமாரின் மகனும், நடிகருமான சூர்யா கூறியதாவது:-
என் தந்தையின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் நோக்கத்தில் அவர் வரைந்த ஓவியங்களை கண்காட்சியாக நடத்தினோம். அதற்கு பெரிய வரவேற்பு இருந்தது. ஏராளமானோர் இந்த கண்காட்சியை கண்டுகளித்தனர். எனது தந்தை பெயரில் வருடந்தோறும் ஓவியப்போட்டி நடத்தி அதில் வெற்றி பெறுவோருக்கு சிறந்த ஓவியருக்கான விருதுகள் வழங்க திட்டமிட்டு உள்ளோம்.
என் தந்தை ஒழுக்கமாக வாழ்ந்தவர். அவருடைய வாழ்க்கையை நாங்களும் கடைப்பிடித்து வாழ ஆசைப்படுகிறோம். வெளிநாடுகளுக்கு செல்லும்போது இளைய தலைமுறையினர் உங்கள் தந்தை தான் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்.
அவரின் அறிவுரைகளை பின்பற்றியே எங்கள் வாழ்க்கையை நடத்துகிறோம் என்று சொல்கின்றனர். இது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. எனது தந்தை ராமாயணம், மகாபாரதம் சொற்பொழிவுகள் நடத்தி உள்ளார். அடுத்து திருக்குறள் பற்றி பேசவும் தயாராகி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
The post வருடந்தோறும் சிறந்த ஓவியர்களுக்கு விருது: நடிகர் சூர்யா அறிவிப்பு appeared first on tamizlnews.


IlamaiFM

Current track
TITLE
ARTIST