Cinema

Page: 4

‘அஞ்சான்’ படத்தின் தோல்விக்கு பிறகு லிங்குசாமி எந்த படமும் இயக்கமால் தயாரிப்பு பணியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இடையில், விஷாலை வைத்து சண்டக்கோழி இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டார். இதற்காக பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார்.
அல்லு அர்ஜுன் நடிக்கும் இந்த படம் தமிழ் – தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகிறது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தனது 12-வது தயாரிப்பாக தயாரிக்கிறார்.
இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர்கள் யாரும் இன்னும் தேர்வாகவில்லை. மேலும், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரமும் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் தொடங்கவிருக்கின்றனர். இப்படத்தின் தொடக்கவிழா இன்று சென்னை நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் அல்லு அர்ஜுன், தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, இயக்குனர் லிங்குசாமி ஆகியோர் கலந்துகொண்டு படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இப்படத்திற்கு இன்னும் தலைப்பும் தேர்வு செய்யப்படவில்லை.
The post லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் நேரடி தமிழ் படம் appeared first on tamizlnews.

‘வேந்தர் பிலிம்ஸ்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர் மதன். இவர், கடந்த மே மாதம் முதல் தலைமறைவாக உள்ளார். இதையடுத்து அவரை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில், மதனின் தாயார் தங்கம் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையின்போது, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பில் இடம் வாங்கித்தருவதாக கூறி பலரிடம் பல கோடி ரூபாயை வாங்கி மதன் மோசடி செய்துள்ளதாகவும், இதுகுறித்து பணத்தை இழந்தவர்கள் போலீசில் புகார் செய்துள்ளதாகவும் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மோசடி புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவும், காணாமல் போன மதனை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் தனிப்படை அமைக்கவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி, கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணனை விசாரணை அதிகாரியாக நியமித்து, அவர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார், அவ்வப்போது சென்னை ஐகோர்ட்டில் தங்களது புலன் விசாரணையின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் முன்பு கடந்தவாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, காணாமல் போன மதனை செப்டம்பர் 21-ந் தேதிக்குள் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. படஅதிபர் மதனை கைது செய்ய கால அவகாசம் வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. அப்போது அரசு வக்கீல், ‘மதனின் கூட்டாளிகள் இருவர் நேபாளம் நாட்டில் தலைமறைவாகி இருந்து வருகின்றனர். மதன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளது’ என்று கூறினார்.
இதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ‘மதனை கைது செய்யவேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை போலீசார் அமல்படுத்தவில்லை. இந்த வழக்கை வருகிற அக்டோபர் 6-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதற்குள் மதனை கண்டுபிடித்து கைது செய்யவில்லை என்றால் சென்னை போலீஸ் கமிஷனர் மீது தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பதிவு செய்வோம். கடும் நடவடிக்கையும் எடுப்போம்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.
மேலும், ஆட்கொணர்வு மனுவில் பாரிவேந்தர் மீது மனுதாரர் குற்றம் சுமத்துவதால், அவரது பெயரை வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கவேண்டும் என்று கூறி விசாரணையை வருகிற அக்டோபர் 6-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
The post மதனை 6-ந்தேதிக்குள் கைது செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை: ஐகோர்ட்டு எச்சரிக்கை appeared first on tamizlnews.

ராதிகா ஆப்தே இந்தி படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். அவரது நிர்வாண படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஹாலிவுட் படமொன்றிலும் துணிச்சலாக கவர்ச்சி காட்டினார்.
தமிழ் படங்களில் மட்டுமே குடும்ப பாங்காக வந்தார். ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளிவந்த கபாலி படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.
பிரகாஷ்ராஜுடன் டோனி, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் வெற்றிச்செல்வன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.
பல நடிகர்கள் தன்னிடம் தவறான நோக்கத்தில் அணுகியதாக ராதிகா ஆப்தே பரபரப்பு புகார் கூறியுள்ளார். நடிகைகள் சிலர் இதுபோன்ற அனுபங்களை சந்தித்து இருப்பார்கள். ஆனால் அவர்கள் வெளியே சொல்வது இல்லை. ஆனால் ராதிகா ஆப்தே துணிச்சலாக அதை வெளிப்படுத்தி இருக்கிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-
சினிமாவில் எனக்கு சில மோசமான அனுபவங்கள் நடந்துள்ளன. ஒருமுறை தென்னிந்திய நடிகர் ஒருவர் நான் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு இரவு நேரத்தில் போன் செய்து பேசினார். அவரது பேச்சில் தவறான நோக்கம் தெரிந்தது. நான் கடுப்பானேன். அந்த நடிகரை திட்டி விட்டேன். அதை மனதில் வைத்து அடிக்கடி அவர் என்னிடம் சண்டை போட்டார். இதுபோல் இந்தி திரையுலகிலும் ஒரு நிகழ்வு நடந்தது.
இந்தி படமொன்றில் நடிக்க என்னை அணுகினர். அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் முக்கியமான ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும், சம்மதமா? என்று கேட்டனர். அப்படி கேட்டது எனக்கு வேடிக்கையாக இருந்தது. நான் அதுமாதிரியான பெண் இல்லை என்று கூறி விட்டேன். என்னை படுக்கைக்கு அழைத்தவன் நரகத்துக்கு போவான் என்றும் கூறினேன்.
நான் கவர்ச்சியாக நடிப்பதாக விமர்சிக்கின்றனர். கதாபாத்திரங்களுக்கு தேவையாக இருப்பதால் அவ்வாறு நடிக்கிறேன். அதற்காக நான் கவலைப்படவில்லை.
இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.
The post என்னிடம் சில நடிகர்கள் தவறாக நடக்க முயன்றார்கள்: ராதிகா ஆப்தே appeared first on tamizlnews.

‘நானும் ரவுடிதான்’ படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன், பலராலும் பேசப்படும் இயக்குனர்களில் ஒருவராகிவிட்டார். இப்படத்தை தொடர்ந்து அவர் யார்? படத்தை இயக்குவார் என்று பலருடைய எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. இந்நிலையில், விக்னேஷ் சிவன் தனது அடுத்த படத்தை சூர்யாவை வைத்து இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளிவந்தது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கப் போகிறார் என்பதும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஆனால், நாயகி யார் என்பது மட்டும் முடிவாகாமலேயே இருந்து வருகிறது. நயன்தாராதான் மீண்டும் விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்கப்போவதாக சில செய்திகள் வெளியானாலும், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமலேயே இருந்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்திற்கு தற்போது தலைப்பை வெளியிட்டுள்ளனர். ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்பதுதான் அந்த படத்தின் தலைப்பு. இது ‘பாட்ஷா’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசும் வசனம். அந்த வசனத்தையே தற்போது படத்தின் தலைப்பாக மாற்றியுள்ளன். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
The post சூர்யா-விக்னேஷ் சிவன்-அனிருத் மூன்று பேரும் இப்போ தானா சேர்ந்த கூட்டம் appeared first on tamizlnews.

‘அட்டக்கத்தி’ தினேஷ், சமுத்திரகனி, ஆனந்தி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘விசாரணை’. இப்படத்தை தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்திருந்தனர. லைக்கா நிறுவனம் இப்படத்தை வெளியிட்டது. ‘லாக்கப்’ என்ற நாவலை மையமாக வைத்து இயக்குநர் வெற்றிமாறன் இப்படத்தை இயக்கியிருந்தார்.
இப்படம் வெனிஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளது. வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் இந்த படம் பெற்றது.
மேலும், சிறந்த தமிழ் படம், சிறந்த எடிட்டிங், சிறந்த துணை நடிகர் என 3 தேசிய விருதுகளையும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், ‘விசாரணை’ படம் ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் கேத்தன் மேத்தா, இந்த ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருது பிரிவு போட்டிக்கு இந்தியாவில் இருந்து ‘விசாரணை’ படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த பரிந்துரையில் மொத்தம் 29 இந்திய படங்கள் இடம்பெற்றுள்ளது. இதிலிருந்து ‘விசாரணை’ படத்தை மட்டும் தேர்வு குழுவினர் ஆஸ்கார் விருது போட்டிக்கு பரிந்துரை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பாக தமிழ் படங்களில் இருந்து ‘ஹேராம்’ திரைப்படம்தான் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 16 வருடங்கள் கழித்து ஒரு தமிழ் படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
The post ஆஸ்கார் விருதுக்கு வெற்றிமாறனின் ‘விசாரணை’ படம் பரிந்துரை appeared first on tamizlnews.

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது ‘ரெமோ’ படம் உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்து தகவல் எதுவும் வெளிவரவில்லை.
ஏற்கனவே மோகன் ராஜா இயக்கிய படங்களான ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ ஆகிய படங்களில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படங்களில் பிரகாஷ் ராஜின் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது.
தற்போது மூன்றாவது முறையாக மோகன் ராஜாவுடன் இணைந்திருக்கிறார் பிரகாஷ் ராஜ். இப்படத்திலும் பிரகாஷ் ராஜின் கதாபாத்திரம் அனைவராலும் வரவேற்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
The post சிவகார்த்திகேயன் படத்தில் பிரகாஷ் ராஜ் appeared first on tamizlnews.

ஐஸ்வர்யா தனுஷ் ‘3’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் பெரியதளவில் வெற்றியடையாவிட்டாலும், பெண் இயக்குனராக தமிழ் சினிமாவில் அனைவராலும் ஐஸ்வர்யா தனுஷ் பேசப்பட்டார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா தனுஷ் தனது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார். இந்த முறை பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் யார் நடிக்கிறார்கள்? யார் தயாரிக்கிறார்கள்? என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
இப்படத்தில் நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பேச்சுக்கள் அடிபடுகிறது. விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post பெண்களை மையப்படுத்தி படம் எடுக்கும் ஐஸ்வர்யா தனுஷ் appeared first on tamizlnews.

சமீபத்தில் சென்னையில் அதிகாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதியதில் 13 ஆட்டோக்கள் சேதம் அடைந்தது. அதில் ஆட்டோக்களில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் 9 ஆட்டோ ஓட்டுனர்கள் படுகாயம் அடைந்தார்கள்.
அவர்களில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா, அக்குர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த செய்தியை அறிந்த தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளரும், நடிகருமான விஷால் அவர்களுடைய குடும்பத்தை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது இறந்த ஆறுமுகத்துக்கு மணிஷா என்ற 7-வயது மகள் இருப்பதை அறிந்தார். உடனே மணிஷாவின் கல்விச் செலவு அனைத்தையும் தனது தேவி அறக்கட்டளை பொறுப்பேற்று கொள்வதாக கூறி அவர்களுக்கு ஆறுதல் கூறி சமாதானம் அடைய வைத்தார். ஆறுமுகத்தின் குடும்பத்தினரும் விஷாலுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
The post விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் மரணம்: மகளின் கல்வி செலவை ஏற்ற விஷால் appeared first on tamizlnews.

பிரபல இந்தி நடிகை சோனம் கபூர். இவர் நடிகர் அனில்கபூரின் மகள் ஆவார். ராஞ்சனா இந்தி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார். இந்த படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.
இந்தி நடிகைகள் பலர் நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் மது விருந்துகளில் பங்கேற்பதை வழக்கமாக வைத்துள்ளனர். சோனம் கபூரிடமும் மது விருந்துகளில் பங்கேற்பீர்களா? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
“நான் மதுபானங்களை தொட்டதே இல்லை. அந்த பழக்கமே எனக்கு கிடையாது. அதை நினைத்துக்கூட பார்க்க மாட்டேன். இதனால் மது விருந்துகளில் கலந்து கொள்வது இல்லை. அவற்றை புறக்கணித்து விடுவேன். சினிமா துறையில் இருக்கும் யாரையும் இதுவரை காதலிக்கவும் இல்லை. இரவு நேரங்களில் புத்தகம் கையுமாகத்தான் இருப்பேன். எனது படுக்கையில் புத்தகங்கள் இருக்கும். தூக்கம் வராதபோது அந்த புத்தகங்களைத்தான் படிப்பேன்.
நிறைய பாதுகாவலர்களுடன் நான் வருவதாக விமர்சிக்கப்படுகிறது. சினிமாவில் அறிமுகமானதில் இருந்து அவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். என் சொந்த வாழ்க்கை பற்றிய எல்லா விஷயங்களும் அவர்களுக்கு தெரியும். பாதுகாவலர்கள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது. எனது தேவைகளை அவர்கள் கவனித்துக்கொள்கிறார்கள். மற்றவர்கள் என்னிடம் நெருங்காமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
பிரபலங்கள் எது செய்தாலும் விளம்பரமாகி விடுகிறது. இந்த நிலையில் பாதுகாவலர்கள் என்னை சுற்றி இருப்பது அவசியம். அவர்கள் எனது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமான விஷயங்கள் வெளியே போகாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.”
இவ்வாறு சோனம் கபூர் கூறினார்.
The post மது விருந்துகளில் பங்கேற்க மாட்டேன்: சோனம்கபூர் appeared first on tamizlnews.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா விலங்குகள் நலவாரியத்தின் விளம்பர தூதராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமாக செயல்பட்ட விலங்குகள் நலவாரியத்தின் விளம்பர தூதராக சவுந்தர்யா நியமிக்கப்பட்டதை கண்டித்தும், அந்த அமைப்பில் இருந்து அவர் பதவி விலக வலியுறுத்தியும் தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகம் சார்பில் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள், சவுந்தர்யாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பியும், அவரது உருவப்படத்தை தீயிட்டும் எரித்தனர்.
இதுகுறித்து தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கூறுகையில், “நடிகர் ரஜினிகாந்த் முரட்டுகாளை திரைப்படத்தில் காளையை அடக்குவது போன்ற காட்சியில் நடித்து தமிழக மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தார்.
ஆனால் அவரது இளைய மகள் சவுந்தர்யா விலங்குகள் நலவாரியத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டு இருப்பது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் தமிழக மக்கள் நெஞ்சங்களில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவர் விளம்பர தூதர் பதவி மற்றும் உறுப்பினர் பதவியில் இருந்தும் விலக வேண்டும்.
இல்லையென்றால் அவருக்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும். மேலும், இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்தை விரைவில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்” என்றார்.
The post விலங்குகள் நலவாரிய தூதராக நியமனம்: சவுந்தர்யா ரஜினிகாந்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் appeared first on tamizlnews.


IlamaiFM

Current track
TITLE
ARTIST