Cinema

Page: 5

“சினிமா பாதுகாப்பான தொழிலாக இருக்கிறது. பெண்கள் தாராளமாக நடிக்க வரலாம். பயப்பட தேவை இல்லை” என்று நடிகை அனுஷ்கா கூறினார்.
இதுகுறித்து நடிகை அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:-
“சினிமாவில் பெண்கள் நடிக்க வருவது பற்றி சிலர் ஒரு மாதிரி பேசுகிறார்கள். அவர்களின் எண்ணமும் கருத்தும் என்னை ஆச்சரியப்படுத்துவதாக இருக்கிறது. அவர்கள் நினைப்பது போல் சினிமா மோசம் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பான தொழிலாகவே இருக்கிறது.
எனவே பெண்கள் நடிக்க வருவதற்கு பயப்பட வேண்டாம். நான் நடிகையாக அறிமுகமான ஆரம்ப கால கட்டத்தில் சினிமா பற்றி எதுவும் தெரியாது. பயந்தேன். அழுதும் இருக்கிறேன். சினிமாவை விட்டு ஓடிவிடலாம் என்றும் நினைத்து இருக்கிறேன்.
அதற்கு காரணம் சினிமாவில் இருப்பவர்களோ அல்லது சினிமா சூழ்நிலையோ கிடையாது. முறையாக எதுவும் கற்றுக்கொள்ளாமல் நான் வந்ததுதான். நடிப்பு பற்றி எதுவும் புரிந்து கொள்ளமுடியாமல் இருந்தேன்.
கற்றுக்கொண்டதும் சகஜமாகி விட்டேன். சினிமாவை பற்றி மற்றவர்கள் கருத்து எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். என்னை பொருத்தவரை பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான தொழில் சினிமா என்று சத்தமாக சொல்வேன்.
நான் பெரிய நடிகையாகி விட்டதால் இப்படி சொல்கிறேன். புதுமுக நடிகையாக இருந்தால் சொல்லி இருக்க மாட்டேன் என்று நினைக்கலாம். நானும் புதுமுக நடிகையாக இருந்துதான் பெரிய நடிகையாக உயர்ந்தேன்.
புதுமுகமாக இருந்த போது என்னை யாரும் கஷ்டப்படுத்தவில்லை. நல்லது கெட்டது எல்லா இடங்களிலும் இருக்கிறது. நாம் சரியாக இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை.
நல்லது கெட்டதுக்கு அவரவர் எடுக்கும் முடிவுகளே காரணமாகின்றன. என் வாழ்க்கையை சினிமா இல்லாமல் நினைத்து பார்க்க முடியவில்லை. எதிர்காலத்தில் எனக்கு குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு சினிமா தொழிலில் ஈடுபட ஆசை வந்தால் மறுக்க மாட்டேன். சினிமாவில் அவர்களை சந்தோஷமாக அறிமுகப்படுத்துவேன்.”
இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
The post பாதுகாப்பான தொழிலாக இருக்கிறது “சினிமாவில் நடிக்க பெண்கள் பயப்பட தேவை இல்லை” நடிகை அனுஷ்கா சொல்கிறார் appeared first on tamizlnews.

‘கபாலி’க்கு பிறகு தன்ஷிகா நாயகியாக நடித்து வரும் படம் ‘ராணி’. இதில் போலீஸ் அதிகாரி வேடத்தில் விஜயசாந்தி பாணியில் நடிக்கிறார். சமுத்திரக்கனியின் உதவியாளர் பாணி இயக்கும் இந்த படத்தில் ஒரு கொலை தொடர்பான விசாரணையை தன்ஷிகா மலேசியா சென்று நடத்துகிறார். அப்போது நடைபெறும் சம்பவங்களே திரைக்கதை.
‘ராணி’ படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக மலேசியாவில் நடந்தது. தன்ஷிகா தங்கி இருந்த ஓட்டலில் இருந்து படப்பிடிப்பு தளத்துக்கு சென்றுவர ரூ. 2 கோடி மதிப்புள்ள ஒரு சொகுசு காரை ஏற்பாடு செய்து இருந்தனர்.
கேமரான் தீவு பகுதியில் படப்பிடிப்பை முடித்து விட்டு ஓட்டலுக்கு திரும்ப தன்ஷிகா தயார் ஆனார். ஆனால் அப்போது பதட்டத்துடன் அங்கு வந்த டிரைவர் ‘‘காரை காணவில்லை, யாரோ கடத்திச் சென்றுவிட்டார்கள்’’ என்று கூறியுள்ளார்.
மாயம் ஆன காரை கண்டு பிடித்து தரும்படி படத்தயாரிப்பாளர் அங்குள்ள போலீசில் புகார் செய்து இருக்கிறார். காரை மலேசியா போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
The post மலேசிய படப்பிடிப்பின் போது தன்ஷிகா கார் திருட்டு appeared first on tamizlnews.

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘எஸ்.3’. சூர்யா – ஹரி கூட்டணியில் உருவான ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக முந்தைய இரண்டு பாகங்களிலும் நடித்த அனுஷ்கா நடித்து வருகிறார்.
மேலும், ஸ்ருதிஹாசன், தாகூர் அனுப் சிங் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இப்படத்திற்கான அறிமுக பாடலை ஹாரிஸ் ஜெயராஜ் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இன்று மாலை 5 மணிக்கு இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கப்போவதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.
அதன்படி, வருகிற டிசம்பர் 16-ந் தேதி ‘எஸ்-3’ படத்தை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விரைவில் இப்படத்தின் ஆடியோவையும், டிரைலரையும் வெளியிடவுள்ளனர்.
The post சூர்யாவின் எஸ்-3 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு appeared first on tamizlnews.

விஜய்ஆண்டனி 2005-ல் வெளியான ‘சுக்ரன்’ படத்தில் இசை அமைப்பாளர் ஆனார். 2012-ம் ஆண்டு ‘நான்’ என்ற படத்தில் ஹீரோ ஆனார். இதை தொடர்ந்து அவர் நடித்த படங்கள் வெற்றி பெற்றன.
சமீபத்தில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் தமிழ், தெலுங்கு இரண்டிலும் வெற்றி படமாக அமைந்தது. இப்போது விஜய்ஆண்டனி நடித்து வரும் ‘எமன்’, சைத்தான்’ படங்களும் தமிழ், தெலுங்கில் தயாராகி வருகின்றன.
இந்த நிலையில் பிச்சைக்காரன் படம் இந்தியில் தயாராக இருக்கிறது. இதை பெரிய நிறுவனம் ஒன்று தயாரிக்க முன் வந்துள்ளது. இந்த படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி நடிக்க முடிவு செய்துள்ளார்.
இதன் மூலம் இசை அமைப்பாளர், பாடகர், நடிகர், பட தயாரிப்பாளர் என்பதை தொடர்ந்து இயக்குனராகவும் மாற இருக்கிறார்.
The post இந்தி பட இயக்குனராகும் விஜய் ஆண்டனி appeared first on tamizlnews.

ரித்திகா சிங் பத்திரிகை நிருபராகவும், கிராமத்தில் இருந்து சென்னை வந்து போராடும் இளைஞனாக விஜய்சேதுபதியும் நடித்துள்ளனர்.
‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை ரித்திகா சிங் கூறுகையில் ”ஆண்டவன் கட்டளை படத்தில் ரிப்போர்ட்டராக நடிக்க பல சேனல்களைப் பார்த்து அவர்களுடைய நடையுடை பாவனைகளை கற்றுக்கொண்டேன். எனக்கும் இப்போது கேள்வி கேட்க தெரியும். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்துவிடம் பேட்டி எடுக்க விரும்புகிறேன்.
இன்னும் சரியாக தமிழ்பேச வரவில்லை. இப்போது மற்றவர்கள் தமிழில் பேசுவதை புரிந்து கொள்ள முடிகிறது. படப்பிடிப்பில் மற்றவர்கள் சொல்வதை மொழிபெயர்த்து சொல்ல எனக்கு ஒரு மொழி பெயர்ப்பாளர் இருக்கிறார்.
விரைவில் தமிழ்பேச கற்றுக்கொள்வேன். முதல் படத்தில் தேசிய விருது கிடைத்தது எனது அதிர்ஷ்டம். இனி எந்த வேடத்தில் நடித்தாலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற பொறுப்பு வந்திருக்கிறது.
தமிழில் தனுஷ் பிடிக்கும். அவருடன் நடிக்க ஆசை. நான் ஜோதிகாவின் ரசிகை. அவரது நடிப்யை மிகவும் ரசிப்பேன். தமிழ் ரசிகர்களை எனக்கு மிகவும் பிடிக்கிறது. ஒரு படம் தான் நடித்திருக்கிறேன்.
என்றாலும் என்னை மிகவும் பாராட்டுகிறார்கள். முகத்தில் காயம்பட்டால் படத்தில் நடிப்பதை பாதிக்கும் என்பதால் இப்போது பாக்சிங் போட்டிகளில் பங்கேற்கவில்லை.
‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் நடிக்க விஜய்சேதுபதி மிகவும் உதவினார். நடிப்புதிறமையை கற்று வருகிறேன். படப்பிடிப்பில் இயக்குனர் சொல்வதை செய்கிறேன். அடுத்து பி.வாசு இயக்கும் ‘சிவலிங்கா’ படத்தில் ராகவா லாரன்சுடன் நடிக்கிறேன். தெலுங்கில் வெங்கடேசுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன்” என்றார்.
The post தனுஷூடன் நடிக்க ஆசை: நடிகை ரித்திகா சிங் appeared first on tamizlnews.

கோவையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த நடிகர் பிரபு நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரிநீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புபடி கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசு சரியாக செயல்படுகிறது. அதன் வழியில் நடிகர் சங்கம் செல்லும்.
தமிழக, கர்நாடக மக்களிடையே எந்த மோதலும் இல்லை. சில விஷமிகள் தான் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். ஒரு சில அமைப்புகள் அரசியலாக்குகின்றன. இந்த பிரச்சினையை அரசியலாக்க கூடாது. காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களும் சுமுகமாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு நடிகர் பிரபு கூறினார்.
The post காவிரி பிரச்சினையை அரசியலாக்க கூடாது: பிரபு appeared first on tamizlnews.

ராகவா லாரன்ஸ் நடிப்பு, இயக்கம், நடனம் இவற்றில் மட்டுமல்ல அடுத்தவருக்கு உதவும் குணமும் கொண்டவர். பல்வேறு குழந்தைகளுக்கு இதய சிகிச்சைக்கு உதவி இருக்கிறார். ஏழை குழந்தைகள் கல்விக்கும் உதவி வருகிறார். அவரது தாயாருக்கும் கோவில்கட்டி வருகிறார்.
இதுமட்டுமல்ல, தான் நடிப்பதற்காக பதிவு செய்துள்ள படங்களின் தலைப்புகளையும் தனது அபிமான ஹீரோக்களுக்கு விட்டுக் கொடுத்து இருக்கிறார்.
ராகவா லாரன்ஸ் தனது படத்துக்காக பதிவு செய்திருந்த ‘வேதாளம்‘ தலைப்பை அஜீத் நடித்த 57-வது படத்துக்காக விட்டுக் கொடுத்து அவரது ரசிகர்களின் மதிப்பை பெற்று இருந்தார்.
இப்போது விஜய் நடிக்கும் 60-வது படத்துக்கு ‘பைரவா’ என்ற பெயர் வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று இந்த படத்தின் இயக்குனர் பரதன் தேர்வு செய்தார். ஆனால் ஏற்கனவே இந்த பெயரை ராகவா லாரன்ஸ் அவர் நடிக்க இருந்த படத்துக்கு பதிவு செய்து வைத்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து ராகவா லாரன்சிடம் ‘பைரவா’ தலைப்பை விட்டுக் கொடுக்க முடியுமா என்று கேட்டுள்ளனர். இந்த தலைப்பில் அவர் ஏற்கனவே நடிக்க தயாராக இருந்தார். என்றாலும் விஜய் தனது நண்பர் என்பதால் ‘பைரவா’ தலைப்பையும் விட்டுக் கொடுத்து இருக்கிறார். இதனால், விஜய் ரசிகர்கள் மனதிலும் ராகவா லாரன்ஸ் இடம் பிடித்திருக்கிறார்.
The post விஜய், அஜித்துக்கு விட்டுக்கொடுத்த ராகவா லாரன்ஸ் appeared first on tamizlnews.

ரஜினியின் 2-வது மகள் சவுந்தர்யா. இவர் ‘கோவா’ படத்தை தயாரித்தார். சரித்திர பின்னணியுடன் உருவான ரஜினியின் அனிமே‌ஷன் படமான ‘கோச்சடையான்’ படத்தை இயக்கினார்.
சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில் சவுந்தர்யாவும், அஸ்வின் ராம்குமாரும் தற்போது பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது.
திருமணமாகி 6 ஆண்டுகளான நிலையில் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் தனித்தனியாக வசித்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியான செய்தி உண்மைதான் என செளந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள செளந்தர்யா ரஜினிகாந்த், தனது திருமண வாழ்வு குறித்து வெளியான செய்தி உண்மைதான் என்று கூறியுள்ளார்.
தாங்கள் இருவரும் கடந்த ஓராண்டிற்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விவாகரத்து பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது சொந்த வாழ்க்கை குறித்த விவாதங்களை தவிர்க்குமாறும் செளந்தர்யா ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
The post கணவருடனான விவாகரத்தை உறுதி செய்தார் செளந்தர்யா ரஜினிகாந்த் appeared first on tamizlnews.

நடிகர் ரஜினிகாந்துடன் ‘கபாலி’ படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே.
இவர் இந்தி நடிகர் அஜய் தேவ்கன் தயாரிப்பில் லீனா யாதவ் இயக்கத்தில் ‘பார்ச்டு’ என்ற இந்திப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த இந்திப்படத்தில் அவர் அதுல் ஹூசைனுடன் தோன்றும் நிர்வாணக் காட்சிகள் இணைய தளத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அது மட்டுமின்றி, ‘இது படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிப்பதற்கான வணிக தந்திரம்’ எனவும் விமர்சனங்கள் எழுந்தன.
இதுபற்றி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ராதிகா ஆப்தே பேட்டி அளித்தார். அப்போது அவர், “இது எனக்கு வருத்தம் தரவில்லை. அந்த காட்சிகள் வெளியானதால் நான் உடைந்து போக மாட்டேன். இதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன்” என கூறினார்.
மேலும், “அந்தப் படத்தில் எனது பாத்திரத்துக்கு அந்த நிர்வாண காட்சிகள் தேவை என்பது எனக்கு தெரியும். ஆனால் ஊடகங்கள் அதைப் பேசியவிதம் தான் எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது” எனவும் கூறினார்.
“வெளியான காட்சிகள் முன்கூட்டியே கசிந்த காட்சிகள் அல்ல, இந்தப் படம் ஏற்கனவே வெளிநாடுகளில் வெளியாகி விட்டது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம், இந்தியாவில் 23-ந் தேதி வெளியாகிறது.
The post நிர்வாண காட்சிகள் வெளியானதில் கவலை இல்லை: ராதிகா ஆப்தே appeared first on tamizlnews.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அமிதாப்பச்சன், அக்‌ஷய்குமார் நடிக்கும் படம் ‘2.0’. இதில் ரஜினியுடன் அக்‌ஷய்குமார் மோதும் காட்சி படமாகி இருக்கிறது.
அடுத்து ரஜினியுடன் எமிஜாக்சன் நேரடியாக மோதும் சண்டைக் காட்சி படமாக இருக்கிறது. ‘ரோபோ’ வேடத்தில் எமிஜாக்சன் நடிக்கும் இந்த சண்டை காட்சியில் ‘டூப்’ இல்லாமல் ‘ரிஸ்க்‘ எடுத்து நடிக்க அவர் சம்மதித்து இருக்கிறார்.
இந்த படப்பிடிப்பு 10 நாட்களுக்கு மேல் நடைபெற உள்ளது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
The post ரஜினியுடன் மோதும் எமிஜாக்சன் appeared first on tamizlnews.


IlamaiFM

Current track
TITLE
ARTIST