Cinema

Page: 6

விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான ‘இருமுகன்’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
குறிப்பாக விக்ரம் நடிப்பு, ஹாரிஸ் ஜெயராஜ் இசை நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் முதல் நாளில் ரூ.61.35 லட்சம் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம் ரஜினியின் ‘கபாலி’, விஜய்யின் ‘தெறி’ படங்களைத் தொடர்ந்து முதல் நாளில் அதிகம் வசூலித்த மூன்றாவது திரைப்படம் என்ற பெருமை ‘இருமுகனுக்கு’க் கிடைத்துள்ளது.
வரும் வாரம் ஓணம், பக்ரீத் என வரிசையாக பண்டிகை தினங்கள் வருவதால் ‘இருமுகன்’ படத்தின் வசூல் மேலும் பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post வசூலில் கபாலி, தெறிக்கு அடுத்த இடத்தில் விக்ரமின் இருமுகன் appeared first on tamizlnews.

எந்த துறையில் யார் சாதித்தாலும் முதல் ஆளாக பாராட்டக்கூடியவர் நடிகர் விஜய். அந்த வகையில் தற்போது ரியோவில் நடந்து வரும் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பாராட்டு செய்தியில், பாரா ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு பாராட்டுக்கள். இது நமக்கெல்லாம் பெருமையான ஒன்று. எதிர்கால வாழ்க்கையில் இன்னும் பல உயரங்களை தாண்ட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்த மாரியப்பன் தங்கவேலுவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. மேலும் பரிசுகளும் குவிந்த வண்ணம் இருக்கிறது. பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற 3-வது இந்தியர் மாரியப்பன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
The post பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் தங்கம் வென்றது நமக்கெல்லாம் பெருமையானது: விஜய் பாராட்டு appeared first on tamizlnews.

இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமார் அவ்வப்போது சில படங்களில் நடிகராகவும் நடித்து வந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘தங்கமகன்’ படத்தில் தனுஷுக்கு அப்பாவாக நடித்து முழுநேர நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வரத் தொடங்கியிருக்கிறார்.
அந்த வரிசையில் தற்போது சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் சூர்யாவுக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு ஜோடியாக சரண்யா பொன்வண்ணன் நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.
சூர்யா-விக்னேஷ் சிவன் இணையும் படம் இந்த வருடத்தின் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சூர்யாவுக்கு 35-வது படமாகும். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். ஆக்ஷன் மற்றும் பொழுதுபோக்கு படமாக இது உரவாகவிருக்கிறது. இப்படத்தை கே.ஈ.ஞானவேல்ராஜாவும், சூர்யாவும் இணைந்து தயாரிக்கின்றனர்.
The post சூர்யாவுக்கு அப்பாவாகும் கே.எஸ்.ரவிக்குமார்? appeared first on tamizlnews.

அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘வேதாளம்’ படத்தில் இடம்பெற்ற பாடல்தான் ‘ஆலுமா டோலுமா’. அனிருத் இசையில் அமைந்த இப்பாடல் படம் வெளிவருவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படம் வெளிவந்த பிறகு, அந்த பாடலில் அஜித் ஆடிய விதம், அவருடைய கெட்டப் என அனைத்துமே ரசிகர்களை கவர்ந்தது.
இந்த பாடலுக்கு கல்யாண் மாஸ்டர் நடனம் அமைத்திருந்தார். இந்நிலையில், தற்போது அஜித் நடித்து வரும் ‘தல 57’ படத்திற்கும் அனிருத்துதான் இசையமைத்து வருகிறார். ஆகையால், இந்த படத்திலும் ‘ஆலுமா டோலுமா’ மாதிரி பாடல் அமைகிறதா? என்று தலைப்பை வைத்து நீங்கள் தப்புக் கணக்கு போடவேண்டாம்.
அந்த பாடலுக்கு நடனம் அமைத்த கல்யாண் மாஸ்டர் தற்போது ‘தல 57’ படத்திற்கும் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். அஜித், காஜல் அகர்வால் இணைந்து ஆடும் ஒரு டூயட் பாடலுக்கு இவர் நடனம் அமைத்துள்ளாராம். ஐரோப்பாவில் இந்த பாடலை படமாக்கியுள்ளனர்.
‘தல 57’ படக்குழு தற்போது ஐரோப்பாவில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளது. இப்படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், தம்பி ராமையா, கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சிறுத்தை சிவா இயக்குகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
The post அஜித் படத்தில் மீண்டும் ‘ஆலுமா டோலுமா’ appeared first on tamizlnews.

‘டிமாண்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்க்ததில் புதிய படம் உருவாகவிருக்கிறது. இந்த படத்தில் ஹீரோவாக அதர்வா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் நயன்தாரா போலீஸ் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் இன்னொரு கதாநாயகியும் இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் இப்படத்தில் வில்லனாக நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான செய்தி வெளிவரும் காத்திருப்போம்.
இப்படத்திற்கு ‘இமைக்கா நொடிகள்’ என்று தலைப்பு வைத்துள்ளார். கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சி.ஜெயக்குமார் இப்படத்தை தயாரித்து வருகிறார். இது இந்நிறுவனம் தயாரிக்கும் 3-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
The post நயன்தாராவுக்கு வில்லனாகிறார் கவுதம் மேனன்? appeared first on tamizlnews.

பாலிவுட்டில் பிரபல கதாநாயகியான மந்திரா பேடி, தமிழில் சிம்பு நடித்து வெளிவந்த ‘மன்மதன்’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘அடங்காதே’ படத்திலும் மந்திரா பேடி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
‘அடங்காதே’ படத்தை சண்முகம் முத்துச்சாமி என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இப்படத்தில் சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், வைபவி சந்தில்யா, தம்பி ராமையா, ‘நெருப்புடா’ புகழ் அருண் காமராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தை ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது ‘புருஸ்லீ’, ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியான மன்மதன் நாயகி appeared first on tamizlnews.

மலையாள நடிகை சாய்பல்லவியை அனைவருக்கும் சாய் பல்லவி என்பதைவிட மலர் டீச்சர் என்றுதான் தெரியவரும். அந்த அளவுக்கு ‘பிரேமம்’ படத்தில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர்.
தற்போது தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி, எப்போது தமிழில் நடிப்பார் என்பது அனைவரின் ஆவலாக இருக்கிறது.
அனைவருக்கும் பிடித்துப்போன சாய்பல்லவி, தனக்கு யாரை ரொம்ப பிடிக்கும் என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது, சாய் பல்லவி நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகையாம். அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறதோ? இல்லையோ? அவரை ஒருமுறையாவது நேரில் பார்த்து ஐ லவ் யூ சொல்ல வேண்டும் என்று அவர் விரும்புவதாக கூறியுள்ளார்.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு கதாநாயகி தேடுதல் நடைபெற்று வருகிறது. சாய் பல்லவி கூறுவதை வைத்து பார்க்கும்போது, அநேகமாக சூர்யா படத்தில் அவரை ஜோடியாக நடிக்க வைக்க படக்குழுவினர் அணுகலாம் என்று தோன்றுகிறது.
அதுமட்டுமில்லாமல், சாய் பல்லவிக்கு மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படம் மிகவும் பிடித்த படமாம். மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் ‘காற்று வெளியிடை’ படத்தில் நாயகியாக நடிக்க முதலில் பரிசீலிக்கப்பட்டது சாய் பல்லவி என்பது குறிப்பிடத்தக்கது.
The post அந்த நடிகரிடம் ஐ லவ் யூ சொல்லணும் : மலர் டீச்சர் சாய் பல்லவியின் ஆசை appeared first on tamizlnews.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘தனி ஒருவன்’, ‘பூலோகம்’, ‘மிருதன்’ ஆகிய படங்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தன. தொடர்ந்து அவரது ஒவ்வொரு படங்களும் பெரிய எதிர்பார்ப்புடனேயே உருவாகி வருகிறது.
இந்நிலையில், ஜெயம் ரவி நேற்று தனது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடினார். திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்த நாள் தெரிவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
இந்நிலையில், ஜெயம் ரவியின் மகன் ஆரவ் அவருக்கு விலையுயர்ந்த பரிசுப் பொருள் ஒன்றை பிறந்தநாள் பரிசாக அளித்து ஜெயம் ரவியை ஆச்சர்யத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளார்.
அந்த விலையுயர்ந்த பரிசுப்பொருள் என்னவென்றால், ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்தான் அது. இந்த மோட்டார் சைக்கிள்தான் ஜெயம் ரவிக்கு பிறந்தநாள் பரிசாக அவரது மகன் அளித்துள்ளான்.
தனது மகனிடமிருந்து இவ்வளவு பெரிய பரிசு பொருள் கொடுத்துள்ளது ஜெயம் ரவியை நெகிழ்ச்சியிலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. அந்த பைக்கில் அமர்ந்தபடி போட்டோ எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் அதை பதிவு செய்தும் உள்ளார்.
The post ஜெயம் ரவியின் பிறந்தநாளுக்கு அவரது மகன் கொடுத்த விலையுயர்ந்த பரிசு appeared first on tamizlnews.

துபாயில் நடிகர் விக்ரம் நடித்த இருமுகன் திரைப்படம் நேற்று முதல் நாளாக துபாயில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டது. அதற்கு முன்பாக துபாயில் ஒரு ஓட்டலில் நடிகர் விக்ரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இருமுகன் திரைப்படம் இந்த ஆண்டு வெளிவந்துள்ள திரைப்படங்களில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் திரில்லர் கலந்த திரைப்படமாக வெளியாகி உள்ளது. இது எனக்கு தமிழில் 36-வது திரைப்படம். இந்த திரைப்படத்தை சிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார்.
இந்த படத்திற்கான கதை மற்றும் இயக்கத்தை இயக்குனர் ஆனந்த் சங்கர் சிறப்பாக செய்துள்ளார். இந்த படத்திற்கான இசையை ஹாரிஸ் ஜெயராஜ் அமைத்துள்ளார். அனைத்து பாடல்களும், பாடல் காட்சிகளும் சிறந்த முறையில் வந்துள்ளது. அனைத்து காட்சிகளும் ஹாலிவுட் படத்திற்கு இணையாக எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் நான் இரு வித்தியாசமான வேடங்களில் வருகிறேன். என்னுடன் நயன்தாரா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் மிக சிறப்பாக நடித்துள்ளனர். இதில் நடிகர் நாசர் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தில் நகைச்சுவையும் இருக்கும். இதற்காக தம்பி ராமையா சிறப்பான நகைச்சுவையுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் கதை தமிழ் ரசிகர்களுக்கு உண்மையாக ஒரு மாறுபட்ட விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இருமுகன் திரைப்படத்தின் தொடக்க விழாவை துபாயில் 7 மீடியா நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்தது. இந்த திரைப்படத்தை துபாயில் உள்ள எப்.டி.பி நிறுவனம் வெளியிடுகிறது. நேற்று துபாயில் மாலை தேரா சிட்டி சென்டரில் உள்ள திரையரங்கில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது.
அந்த திரையரங்கம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி காணப்பட்டது. திரைப்படத்தின் முதல்நாள் காட்சியில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டு ரசிகர்களுடன் திரைப்படத்தை பார்த்தார்.
The post இருமுகன் ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட விருந்தாக அமையும்: துபாயில் விக்ரம் பேட்டி appeared first on tamizlnews.

கிரியேட்டிவ் கிரிமினல் சார்பில் ஆர். அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கர்மா’. வருகிற 16-ந்தேதி இது ஆன்லைனில் ரிலீஸ் ஆகிறது. ஐ.டி யூன்ஸ், கூகுள் பிளே, அமேசான் வீடியோ உட்பட பல இணைய தளங்களில் இப்படத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“இனி வரும் காலங்களில் இணையத்தில் திரைப்படங்களை வெளியிடுவது சர்வ சாதாரணமாகலாம். அதற்கு முன்னோடியாக நாங்கள் இருப்பதற்கு பெருமை அடைகிறோம். இது ஆன்லைனில் வெளியாகும் முதல் தமிழ் படம்.
பாலிவுடின் பிரபல இயக்குனரும் மாற்று சினிமாவுக்கான முன்னோடியாக திகழும் அனுராக் காஷ்யப் ‘கர்மா’ திரைப்படத்தை இணையதளங்களில் நேரடியாக காணும் லிங்கை டுவிட்டரில் வெளியிடுகிறார்.
‘கர்மா’ திரைப்படம் சமீபத்தில் நடந்த மேட் ரிட் சர்வதேச பட விழாவில் உலக திரைப்படங்களில் சிறந்த இயக்குனருக்கான விருதுக்கு தகுதி பெற்றது. இது தவிர ஹாலிவுட் ஸ்கை பிலிம் விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான தகுதி பெற்றது.
இது எக்ஸ்பிரிமெண்டல் வகையை சார்ந்த தனி படமாகும்” என்று தயாரிப்பாளர் தெரிவித்தார்.
கவிஞர் வைரமுத்து இந்த படத்திற்கான டைட்டில் பாடலை எழுதி பாடி இருக்கிறார். எல்.வி. கணேசன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு வி.பி. சிவானந்தம், படத்தொகுப்பு வினோத் பாலன்.
‘தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஆன்லைனில் வெளியிடப்படும் ‘கர்மா’ திரைப்படத்திற்கு அனைவரும் ஆதவளித்து புதுமுயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும்’என்று இந்த படத்தை தயாரித்துள்ள கிரியேட்டிவ் கிரிமினல் பட நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
The post ஆன்லைனில் ரிலீஸ் ஆகும் முதல் தமிழ்படம் கர்மா appeared first on tamizlnews.


IlamaiFM

Current track
TITLE
ARTIST