Cinema

Page: 7

ராஜுமுருகன் இயக்கிய ‘ஜோக்கர்’ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி சென்னை வடபழனியில் நடந்தது. விழாவில் நடிகர் சிவகுமார் கலந்துகொண்டு பேசியதாவது:-
“கிராமத்து பிரச்சினைகளை மையப்படுத்தி சிறந்த படமாக ‘ஜோக்கர்’ வந்துள்ளது. கிராம மக்கள் கழிப்பறை வசதி இன்றி கஷ்டப்படுவதை படத்தில் காட்டி உள்ளனர். நான் சிறிய வயதில் இந்த கஷ்டத்தை அனுபவித்து இருக்கிறேன். வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாத பெண்கள் மிகவும் சிரமப்படும் நிலைமை உள்ளது.
‘ஜோக்கர்’ படத்தில் கழிப்பறை இருந்தால்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஒரு ஏழைப்பெண் காதலனை வற்புறுத்துவதும் மத்திய அரசு திட்டத்தில் அது கட்டப்பட்டு பிறகு இடிந்து விழுந்து அந்த பெண் கோமாவுக்கு போவதும் பெரிய சோகம். மதுவால் மக்கள் சீரழிவதை நினைக்கும் போது ரத்தக்கண்ணீர் வருகிறது. மக்கள் நலனுக்காக போராடுபவர்களை சமூகம் வேறுமாதிரிதான் பார்க்கிறது.
திரைப்படங்கள் ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஏற்ப மாற்றங்களை சந்தித்து வருகிறது. தியாகராஜ பாகவதர் காலத்தில் 50 பாடல்களுடன் படங்கள் வந்தன.
பிறகு வசனங்களுக்கு முக்கியத்துவம் அளித்து படங்கள் எடுத்தனர். மணிரத்னம் காலத்தில் வசனம் சுருங்கியது. அவரது படத்தில் மொத்த வசனமே ஒரு பக்கம்தான் இருக்கும். தற்போது காக்கா முட்டை, குக்கூ என்று வேறு சாயல்களில் படங்கள் வருகின்றன.
சினிமாவுக்கு வீழ்ச்சி கிடையாது. பீனிக்ஸ் பறவைபோல் அது எழுந்து கொண்டே இருக்கும். திறமைசாலிகளாக வரும் புதிய இயக்குனர்கள் சினிமாவை காப்பாற்றிக்கொண்டே இருப்பார்கள்.”
இவ்வாறு சிவகுமார் பேசினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு, டைரக்டர் லிங்குசாமி, நடிகர் குரு சோமசுந்தரம், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்
The post புதிய இயக்குனர்கள் சினிமாவை காப்பாற்றுவார்கள்: சிவகுமார் பேச்சு appeared first on tamizlnews.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பிரான்ஸ் அரசின் உயரிய விருதான ‘செவாலியே’ விருது உலக நாயகன் கமலஹாசனுக்கு அறிவிக்கப்பட்டிருப்பது தமிழினத்திற்கு மிகுந்த பெருமிதத்தையும் மகிழ்வையும் அளித்துள்ளது.
‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரால் பட்டை தீட்டப்பட்டு, 16 வயதிலே என்ற ஆகச்சிறந்த திரைக்காவியம் மூலமாக ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜாவால் தமிழ்த் திரையுலக கிரீடத்தின் வைரமாகப் பதிக்கப்பட்டவர். உலக நாயகன் கமல்ஹாசன்.
அசலான மனித வாழ்க்கையைத் தமிழ்த்திரையுலகில் மறக்க முடியாத காவியங்களாக, செதுக்கிற திரையுலகப் பிதாமகன்களில் முதன்மையானவர். காதலை வெளிப்படுத்தும் திரைப்படங்களில் மட்டுமல்லாது வறுமையின் நிறம் சிவப்பு, சத்யா, உன்னால் முடியும் தம்பி, அன்பே சிவம், மகா நதி போன்ற பல சமூக உணர்வை விதைக்கிற திரைப்படங்களின் அழுத்தமான முத்திரையை பதித்தவர். அவர் பிறவிக்கலைஞர்.
தமிழ்த்திரையுலகின் பெருமைக்குரிய அடையாளமாகத் திகழ்கிற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனது கலைவாரிசாக நேசித்த உலக நாயகன் கமல்ஹாசனும் நடிகர் திலகம் பெற்ற அதே உயரிய செவாலியே விருதை பெறுவது சிறப்பிலும் சிறப்பு.
இந்த விருது இம்மண்ணில் திரைக்கலையை நேசித்து வாழக் கூடிய அனைத்துத் தமிழர்களுக்குமானது என்று நாங்கள் எண்ணி பெருமை கொள்கிறோம். உலக அரங்கில் தமிழ்த் திரையுலகைப் பிரதிதித்துவப்படுத்துக்கிற இம்மண்ணின் கலைஞன் கமல்ஹாசனை கட்டித்தழுவி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post செவாலியே விருது பெற்ற கமல்ஹாசனுக்கு சீமான் வாழ்த்து appeared first on tamizlnews.

பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி. இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு சொந்தமான பண்ணை வீடு கேரள மாநிலம் சாலக்குடியில் உள்ளது. கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி இங்குள்ள பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் கலாபவன் மணியும் சிலரும் கலந்து கொண்டனர்.
மது விருந்தின்போது கலாபவன்மணி மயங்கி விழுந்தார். இதை தொடர்ந்து கொச்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், 6-ந்தேதி இறந்து விட்டார். கலாபவன்மணியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து சாலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
கலாபவன்மணியின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தடய அறிவியல் பரிசோதனையில் அவரது உடலில் மெத்தனால் என்ற வி‌ஷத்தன்மை வாய்ந்த ரசாயனம் கலந்து இருந்தது தெரிய வந்தது. இது அவரது உடலில் எப்படி? கலந்தது என்ற மர்மத்தை போலீசாரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் கலாபவன் மணி கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தாரா? என்பதை உறுதிப்படுத்த முடியாமல் போலீசார் திணறும் நிலை ஏற்பட்டது.
இதை தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டுமென்று கலாபவன் மணியின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். இந்த பிரச்சினையில் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் தனிக்கவனம் செலுத்தினார். சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டார். ஆனால் இதுவரை சி.பி.ஐ. விசாரணை தொடங்கவில்லை.
இதற்கிடையில் கலாபவன்மணியுடன் மது விருந்தில் பங்கேற்ற சிலர் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக கலாபவன்மணியின் குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து சாலக்குடி போலீசார் கலாபவன் மணியின் மேலாளர் ஜோதி, கார் டிரைவர் பீட்டர், உதவியாளரும் கலாபவன்மணியின் மனைவியின் உறவினருமான பிஜுன், உதவியாளர்கள் அனீஷ், முருகன், அருண், ஆகிய 6 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்தினார்கள்.
மேலும் அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சாலக்குடி போலீசார் கோர்ட்டில் மனு செய்திருந்தனர். உண்மை கண்டறியும் சோதனை நடத்த சாலக்குடி கோர்ட்டும் அனுமதி அளித்தது.
இதை தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் பெங்களூருக்கு அழைத்துச் சென்று போலீசார் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
The post மரணத்தில் தொடர்ந்து மர்மம்: கலாபவன் மணியின் மேலாளர் உள்பட 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை appeared first on tamizlnews.

சென்னை விருகம்பாக்கம், லோகய்யா காலனியில் வசித்து வருபவர் நடிகை ராதா. ‘சுந்தரா டிராவல்ஸ்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அதில், குன்றத்தூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி வைரம் என்பவர் செல்போனில் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார்.
போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு விருகம்பாக்கம் போலீசாருக்கு உத்தரவிட்டார். விருகம்பாக்கம் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தற்போது ரவுடி வைரம் வேறொரு வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். எனவே செல்போனில் பேசியவர் வைரம் தானா? என்று விசாரித்து வருகின்றனர்.
The post நடிகை ராதாவுக்கு கொலை மிரட்டல்: விருகம்பாக்கம் போலீசார் விசாரணை appeared first on tamizlnews.

அமெரிக்க பத்திரிகையான போர்ப்ஸ் உலகத்திலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் முதல் முறையாக இந்திய நடிகை 10 இடத்துக்குள் வந்துள்ளார். பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே ஆண்டுக்கு 67.70 கோடி சம்பளம் பெற்று 10-வது இடத்தில் உள்ளார்.
அவர் நட்சத்திர நடிகையாக உருவாகி வருகிறார் என்றும் அந்த பத்திரிகை பாராட்டி உள்ளது.
சமீபத்தில் தீபிகா நடித்த இந்தி படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் அவரது மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது.
தற்போது ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். பிரபல நடிகர் வின்டீசலுடன் நடிக்கும் படம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது.
போர்ப்ஸ் வெளியிட்டு இருந்த பட்டியலில் ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ் தொடர்ந்து 2-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார். அவர் ஆண்டுக்கு ரூ.308 கோடி சம்பளம் பெறுகிறார்.
மெலிசா மெக்கார்தி 2-வது இடத்திலும், ஸ்கார்லெட் ஜோஹென்ஸ் 3-வது இடத்திலும் உள்ளனர்.
The post உலகத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் தீபிகா படுகோனேவுக்கு 10-வது இடம் appeared first on tamizlnews.

‘பொய்’,‘ராமன்தேடியசீதை’ படங்களில் நடித்தவர் விமலாராமன். பின்னர் தமிழ் படங்களில் எதிர் பார்த்த வாய்ப்பு இல்லாததால் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து வந்தார்.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க விமலா ராமனுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இது ஆக்‌ஷன் படமாக உருவாகிறது.
The post மீண்டும் தமிழில் விமலா ராமன் appeared first on tamizlnews.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும், டமால் டுமீல், சகுனி, கள்ள பாடம் உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்து இருப்பவர் அரசு என்ற இளவரசன். இவருக்கு 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ந் தேதி காதல் கலப்பு திருமணம் நடந்தது. மனைவியும் சிவா என்ற மகனும் உள்ளனர். மனைவி ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கொடுங்கையூர் கண்ணதாசன் நகரில் வசித்து வந்தார்.
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த இளவரசன் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை காப்பாற்றி ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
தகவல் கிடைத்ததும் கொடுங்கையூர் போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். அவரது வீட்டில் போலீசார் ஒரு கடிதத்தை கைப்பற்றினார்கள். அதில் இளவரசன் நடிகர் சங்க செயலாளர் விஷாலுக்கு உருக்கமான முறையில் எழுதி இருந்தார். கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நான் சினிமாவில் துணை நடிகராகவும், பல நாடகங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறேன். 7 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். எனக்கு திரை உலகில் போதுமான சம்பளம் கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டது.
எனக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டோம். இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். என் குழந்தையையும் என்னிடம் காட்ட மறுக்கிறார்கள். மகனை பார்க்க முடியாத ஏக்கத்தில் மன உளைச்சலுக்கு ஆளானேன்.
இதற்கிடையே என் மனைவியிடம் இருந்து விவாகரத்து நோட்டீஸ் வந்துள்ளது. இதில் எனக்கு விருப்பம் இல்லை. நிதி நிறுவனத்தில் எனது மனைவியுடன் பணியாற்றிய சிலர் அவரது மனதை எனக்கு எதிராக மாற்றிவிட்டார்கள்.
இனி எந்த நடிகருக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது என்பதே என் ஆசை. உங்களை (விஷால்) சந்தித்து நிலைமையை எடுத்துக்கூறி உதவி கேட்க முயன்றேன். ஆனால் உங்களை என்னால் சந்திக்க முடியவில்லை எனவே கடிதம் எழுதி இருக்கிறேன்.
எனக்கு வேறு வழி இல்லாததால் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தேன். என் மரணத்திற்கு பிறகாவது சினிமாவில் போராடும் எல்லா நடிகர்களும் நல்ல வாழ்க்கை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை.
இவ்வாறு இளவரசன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
The post மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் சினிமா துணை நடிகர் தற்கொலை முயற்சி appeared first on tamizlnews.

‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘நீதிக்கு தண்டனை’, ‘ரசிகன்’ உள்ளிட்ட பல புரட்சிகரமான படங்களை இயக்கியவர் பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் நடிகர் விஜய்யின் தந்தையுமாவார். கடந்த வருடம் இவருடைய இயக்கத்தில் வெளிவந்த ‘டூரிங் டாக்கீஸ்’ படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.
அந்த படத்திற்கு பிறகு ‘நையப்புடை’, ‘கொடி’ ஆகிய படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இன்று திடீரென கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.ஏ.சந்திரசேகர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து விசாரிக்கையில், கேரள மாநிலம் குமரகம் பகுதியில் ஓட்டலில் தங்கியிருந்த எஸ்.ஏ.சந்திரசேகர், இன்று ஓட்டல் மாடி படிக்கட்டு வழியாக கீழே இறங்கும்போது கால் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனால், அவரது காலில் காயம் ஏற்படவே, உடனடியாக கோட்டயத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
The post பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆஸ்பத்திரியில் அனுமதி appeared first on tamizlnews.

பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருதை பெற்று, பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். அவருக்கு விருது கிடைத்த பரபரப்பு அடங்குவதற்குள் இயக்குனர், நடிகர், கதாசிரியர் என சினிமாவில் பன்முகம் கொண்ட பார்த்திபனுக்கு அமெரிக்கா அமைப்பு ஒன்று விருது வழங்கி கௌரவித்துள்ளது.
சினிமாவில் மாறுபட்ட சிந்தனையுடன் பணிபுரிந்து வரும் அவருக்கு அமெரிக்காவின் நியூயார்க்கில் இயங்கிவரும் Rocheston Accreditation Institute என்ற அமைப்பு, அவரை பாராட்டி ‘மாறுபட்ட இயக்குனர்’ (Distinguished director) என்ற விருதினை வழங்கியிருக்கிறது. பார்த்திபனின் சினிமா படைப்புகளை பாராட்டி, மிக நீண்ட பாராட்டு உரையும் இந்த பெருமையை அவருக்கு அளித்துள்ளது.
அந்த அமைப்பு வழங்கியுள்ள விருது பட்டயம் தங்கமூலம் பூசப்பட்ட சான்றிதழ் என்பது குறிப்பிடத்தக்கது. எதையும் வித்தியாசமாக செய்ய நினைக்கும் பார்த்திபன், தனக்கு விருது வழங்கப்பட்ட தகவலையும் வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
அவர் தனது முகநூலில் ‘ஏழைக்கேத்த எள்ளுருண்டை’ என்று பதிவு செய்து அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
The post கமலைத் தொடர்ந்து பார்த்திபனுக்கும் வெளிநாட்டில் இருந்து கிடைத்த புதிய விருது appeared first on tamizlnews.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘தொடரி’. பிரபுசாலமன் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க ரெயிலிலேயே படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தனுஷ் ரெயில்வே கேண்டீன் ஊழியராக நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதியே இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், செப்டம்பர் 2-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்திருந்தனர். தற்போது அந்த தேதியிலும் படம் வெளியாகாது என தெரிகிறது.
ஏனென்றால், ‘தொடரி’ படத்தை தயாரித்துள்ள சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் விநியோகஸ்தர்களிடம் வியாபாரம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதால் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாவது சந்தேகம் என கூறப்படுகிறது.
எனவே, படத்தை வரும் செப்டம்பர் 16-ந் தேதி வெளியிடப்படலாம் என படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்களில் கூறப்படுகிறது.
The post மீண்டும் தள்ளிப்போகிறதா தனுஷின் தொடரி? appeared first on tamizlnews.


IlamaiFM

Current track
TITLE
ARTIST