சிம்பு, தனுஷுக்கு எதிராக களமிறங்குவாரா ஜெயம் ரவி?

Written by on February 25, 2017

`போகன்’ படத்திற்கு பிறகு ஜெயம் ரவி `வனமகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனைத்தொடர்ந்து தற்போது `நாய்கள் ஜாக்கிரதை’ பட இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் `டிக் டிக் டிக்’ படத்தில் நடித்து வருகிறார்.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி காட்டுவாசியாக நடித்துள்ள படம் `வனமகன்’. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மிக் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்தில், ஜெயம்ரவியுடன், சாயிஷா சேகல், தம்பிராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்கியுள்ள நிலையில், இப்படத்தை ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தமிழ் புத்தாண்டு ரிலீசாக தனுஷ் இயக்கியுள்ள `பவர்பாண்டி’ படமும், லாரன்ஸின் `சிவலிங்கா’ படமும் ரிலீசாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிம்புவின் `ஏஏஏ’ படமும் அதே நாளில் ரிலீசாகும் என்று கூறப்படும் நிலையில், ஜெயம் ரவியின் `வனமகன்’ படமும் அதே நாளில் வெளியாக உள்ளதாக கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், அதனை அறிய காத்திருக்கத் தான் வேண்டும்.

The post சிம்பு, தனுஷுக்கு எதிராக களமிறங்குவாரா ஜெயம் ரவி? appeared first on tamizlnews.

Comments

comments


IlamaiFM

Current track
TITLE
ARTIST