ஜோதிகாவை தொடர்ந்து பாலா படத்தில் இணையும் முன்னணி நடிகர்

Written by on February 25, 2017

திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ஜோதிகா, தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா தற்போது ‘மகளிர் மட்டும்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது அடுத்த படத்தில் பாலா இயக்கத்தில் நடிக்கவுள்ள ஜோதிகா அப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை பாலாவின் பி ஸ்டுடியோ நிறுவனமும், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளது.

இன்னும் பெயரிப்படாத இப்படத்தில் மிகவும் பிரபலமான கதாநாயகன் நடிப்பார் என கூறப்பட்ட நிலையில், இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக உருவெடுத்துள்ள ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் `புரூஸ் லீ’ படம் மார்ச் 10-ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், அவர் கைவசம் `அடங்காதே’, `4 ஜி’, `ஐங்கரன்’, `சர்வம் தாள மயம்’ உள்ளிட்ட படங்கள் உள்ளன. இந்நிலையில், பாலா இயக்க உள்ள புதிய படத்திலும் ஜி.வி.பிரகாஷ் நடிக்க உள்ளதாக வந்துள்ள புதிய தகவலால் 2017-ல் ஜி.வி.பிரகாஷீக்கு நல்ல திருப்பம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் மார்ச் 1 முதல் துவங்க உள்ள நிலையில், இப்படத்தினை பற்றிய அதிகாரப்பூர்வ செய்திகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஜோதிகாவை தொடர்ந்து பாலா படத்தில் இணையும் முன்னணி நடிகர் appeared first on tamizlnews.

Comments

comments


IlamaiFM

Current track
TITLE
ARTIST