ரஜினியின் பிரபல வசனத்தை படத்தலைப்பாக்கிய `சதுரங்கவேட்டை’ நாயகன்

Written by on February 25, 2017

பிரபல பாடல்களின் பல பல்லவிகள் படத் தலைப்பாகியுள்ளன. பிரபல நாவல்களின் தலைப்புகளும் படத்தின் பெயராகியுள்ளன. அதே போல படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசிய வசனங்களும் படத் தலைப்பாகி வருகின்றன.

‘இது எப்படி இருக்கு’, ‘என் வழி தனி வழி’, ‘கதம் கதம்’, ‘போடா ஆண்டவனே நம்ம பக்கம்’ தலைப்புகளைத் தொடர்ந்து ‘முள்ளும் மலரும்’ படத்தில் சூப்பர் ஸ்டார் பேசிய ‘கெட்ட பையன் சார் இந்தக் காளி’ என்ற வசனமும் ‘கெட்ட பையன் சார் இவன்’ என்று படத் தலைப்பாகியுள்ளது.

‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் நட்டிதான் இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார். இவர் இயக்குநர் ஏ.எல்.விஜய்-யிடம் ‘தாண்டவம்’, ‘தலைவா’, ‘சைவம்’ போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தீபக் கெட்ட பையன் சார் இவன் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

மேலும் இவர் ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘மெல்லத் திறந்தது கதவு’, ‘ராஜாதி ராஜா’ போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவரும் நடிகருமான ஆர். சுந்தர்ராஜனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.எச்..காஷிஃப் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 6 ஃபேஸ் ஸ்டுடியோஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.

The post ரஜினியின் பிரபல வசனத்தை படத்தலைப்பாக்கிய `சதுரங்கவேட்டை’ நாயகன் appeared first on tamizlnews.

Comments

comments


IlamaiFM

Current track
TITLE
ARTIST