மும்பையில் ஊரடங்கை பயன்படுத்தி 87 ஆபாச படங்களை தயாரித்த மாடல் அழகியும் நடிகையுமான கெஹானா வசிஸ்த் கைது செய்யப்பட்டார்.
மும்பை
மும்பையில் ஆபாச படம் எடுத்த தொலைக்காட்சி நடிகை உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். குறும்படங்கள் தயாரிப்பதாக கூறி மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பங்களாக்களில் ஆபாச திரைப்படங்களை உருவாக்கி வந்து உள்ளனர்.
நடிகை கெஹானா வசிஸ்த் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி ஆபாச வீடியோக்களை தயாரித்து உள்ளார்.
ஓடிடி தளங்களில் இந்த ஆபாச விடியோக்களை பதிவேற்றப்படுவது தொடர்பாக உமேஷ் காமத் என்ற நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.ஷா தனாஜி என அடையாளம் காணப்பட்ட ஒரு தொழில்முறை புகைப்படக்காரரும் கைது செய்யப்பட்டு உள்ளார்.
வசிஸ்தாவின் உண்மையான பெயர் வந்தனா திவாரி, சந்தா உள்ள வலைத்தளங்களில் ஆபாச வீடியோக்களை பதிவேற்றி வந்து உள்ளனர். ரூ .36 லட்சம் இந்த சந்தாக்கள் மூலம் சேகரிக்கப்பட்ட நிதி இருப்பதாகக் கூறப்படும் அவரது மூன்று வங்கிக் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
கெஹானா வசிஸ்த் 2012 மிஸ் ஆசியா பிகினி அழகி பட்டம் பெற்றவர். பல திரைப்படங்கள் மற்றும் டிவி தொடர்களில் நடித்துள்ளார். அவர் 80 க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் பணியாற்றியுள்ளார்.தமிழில் பேய்கள் ஜாக்கிரதை திகில் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.
கொரோனா ஊரடங்கால் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படும் துணை நடிகைகளிடம் கெஹனா நைசாகி பேசி ஆபாச படங்களில் நடிக்க வைத்துள்ளார். இதற்காக அவர்களுக்கு படம் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் கொடுத்துள்ளார். 87 ஆபாச வீடியோக்களை எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்களை பார்க்க ரூ.2 ஆயிரம் கட்டணம் வசூலித்துள்ளார்.