சினி செய்திகள்

இயக்குநர், நடிகர், டாக்டர், போலீஸ் என, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் லிஸ்ட் இதோ… மலையாள நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு.!

னக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் என 14 பேர் பட்டியலை வெளியிட்டு, மலையாள நடிகை ரேவதி சம்பத் சமூக வலைத் தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நடிகை, உளவியல் நிபுணர், சமூக ஆர்வலர் என பன்முகத் தன்மை கொண்டவராக ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ரேவதி சம்பத், கோவையில் உள்ள கல்லூரியில் பயின்றவர். ஃபேஸ்புக் பக்கத்தில், தனக்கு பாலியல் தொல்லை தந்தவர்கள் என 14 பேர் பட்டியலை  வெளியிட்டிருக்கிறார்.

“இவர்கள் தன்னை பாலியல் ரீதியாக, உளவியல்ரீதியாக, உணர்வுரீதியாக, துன்புறுத்தியவர்கள். இந்தக் குற்றவாளிகளின் லிஸ்ட் இதோ” என இயக்குநர், நடிகர், டாக்டர், ஃபோட்டோகிராஃபர், எஸ்ஐ என பல தரப்பைச் சேர்ந்தவர்களை குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. ரேவதி சம்பத், இரண்டு வருடங்களுக்கு முன்பே நடிகர் சித்திக் மீதான பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிக்பாஸ் வெற்றிக்கு பிறகு ஆரி வெளியிட்ட முதல் வீடியோ…”இந்த வெற்றி என்னுடையது அல்ல”

piragazh

பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் ஆரி.. கோப்பையை கைப்பற்றி மாபெரும் தருணம்.. நெகிழ்ச்சியான பேச்சு

piragazh

நடிகர் அப்பாஸ்க்கு இவ்வளவு பெரிய மகளா?

piragazh