உலகம்

3 கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி கொடுத்த ரொம் குரூஸ்

 

திரைப்பட துறையில் சர்வதேச அளவில் ஒஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுகள் வருடந்தோறும் ஹொலிவுட் பாரின் பிரெஸ் அசோசியேஷன் என்ற அமைப்பினால் நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறந்த திரைப்படங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த அமைப்பில் 90 பேர் உறுப்பினர்களாக உள்ளநிலையில் கடந்த 19 வருடங்களாக இந்த அமைப்பில் கறுப்பினத்தவர் யாரும் உறுப்பினர்களாக இல்லை எனவும் வெள்ளை நிறத்தவர்கள் மட்டுமே தொடர்ந்து உறுப்பினர்களாக இருந்து வருகிறார்கள் எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதையடுத்து கோல்டன் குளோப் விருது அமைப்புக்கு எதிராக நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரைப்பட துறையினர் கண்டனங்கள் எழுப்பி வருகிறார்கள்.

இந்த சர்ச்சையை தொடர்ந்து பிரபல ஹொலிவுட் நடிகர் ரொம் குரூஸ் (tom cruise) 1989, 1996, 1999 ஆகிய வருடங்களில் தனக்கு வழங்கப்பட்ட 3 கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி கொடுத்துள்ளார் .

இந்த எதிர்ப்புகளை தொடர்ந்து கோல்டன் குளோப் விருது அமைப்பில் கறுப்பினத்தவர்களையும் உறுப்பினர்களாக சேர்க்க ஏற்பாடுகள் நடைபெறுவதாக தொிவிக்கப்படுகின்றது

Related posts

அமேசன் நிறுவனரின் முன்னாள் மனைவி 20,000 கோடி ரூபா நன்கொடை

piragazh

கொரோனாவுக்கு உலக அளவில் 2,038,882 பேர் பலி

piragazh

அமெரிக்க அதிபரானார் ஜோ பிடன்… 46-வது அதிபராக முறைப்படி பதவியேற்றுக்கொண்டார்..!

piragazh