சினி செய்திகள்

அப்பாவிடம் பொய் சொல்லிட்டு ஸ்ரீதேவி மகள் செய்த திருட்டுத்தனம் தெரியுமா?

மறைந்க நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் அம்மா செல்லம். நான் இல்லாமல் இளைய மகள் குஷி கூட சமாளித்துவிடுவார், ஆனால் மூத்த மகளால் ஒரு நாள் கூட இருக்க முடியாது என்று முன்பு பேட்டி ஒன்றில் தெரிவித்தார் ஸ்ரீதேவி. அவருக்கு தன் மகள்கள் தன்னை போன்று நடிகையாவது பிடிக்கவில்லை இருப்பினும் ஜான்வி தான் நடிகையாக வேண்டும் என்று கூறியபோது அதை ஸ்ரீதேவி எதிர்க்கவில்லை. இதையடுத்து ஜான்வி அமெரிக்காவுக்கு சென்று நடிப்பு குறித்து படித்துவிட்டு நாடு திரும்பி நடிகையாகிவிட்டார். இந்நிலையில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் நடத்தும் வாட் விமன் வான்ட் நிகழ்ச்சியில் ஜான்வி கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் ஜான்வி கூறியதாவது,

நான் அமெரிக்காவில் இருந்தபோது தியேட்டருக்கு செல்வதாக என் தந்தையிடம் பொய் சொல்லிவிட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து விமானம் மூலம் லாஸ் வேகாஸ் சென்றேன். ஒரு நாள் முழுவதும் வேகாஸில் சுற்றிவிட்டு மறுநாள் காலை லாஸ் ஏஞ்சல்ஸ் திரும்பினேன். இது என் தந்தைக்கு தெரியாது.

நான் சிறுபிள்ளையாக இருந்தபோது ரொம்ப சேட்டை செய்வேன். எதை எல்லாம் செய்யக் கூடாது என்பார்களோ அதை எல்லாம் செய்வேன். குஷி என்னை விட மூன்று வயது சிறியவர். ஆனால் அவருக்கும், எனக்கும் இடையே பல ஆண்டுகள் இடைவெளி இருப்பது போன்று உணர்கிறேன்.

குஷியுடன் ஒப்பிடும் போது நான் கற்காலத்தை சேர்ந்தவள் போன்று தோன்றும். குஷி யோசிக்கும் விதம், யாரையும் சார்ந்திராமல் இருப்பது, எதற்கும் டென்ஷன் ஆகாமல் இருப்பதை எல்லாம் பார்க்கும் போது நான் வேறு காலத்தை சேர்ந்தவள் போன்று இருக்கும் என்றார்.

கெரியரை பொறுத்த வரை ஜான்வி தற்போது குட்லக் ஜெர்ரி படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கிறது. தான் ராஜ்குமார் ராவுடன் சேர்ந்து நடித்த ரூஹி அஃப்சானா படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார் ஜான்வி.

மேலும் தனக்கு மிகவும் பிடித்த கார்த்திக் ஆர்யனுடன் சேர்ந்து தோஸ்தானா 2 படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் ஜான்வியும், கார்த்திக் ஆர்யனும் காதலிப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது. இருவரும் கோவாவுக்கு சென்று வந்ததை பார்த்தவர்கள் அந்த காதலை உறுதி செய்துவிட்டனர்.

Related posts

பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் ஆரி.. கோப்பையை கைப்பற்றி மாபெரும் தருணம்.. நெகிழ்ச்சியான பேச்சு

piragazh

நடிகர் அப்பாஸ்க்கு இவ்வளவு பெரிய மகளா?

piragazh

2019-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமான பிரபல நடிகைகள்

piragazh