விளையாட்டு

33 வருஷ ஆஸ்திரேலிய சாதனை… முறியடித்த இளம் இந்திய அணி…

Indian Test team won the Test match at Gabba by chasing 328 runs

பிரிஸ்பேன் : இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது. காப்பாவில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த், சுப்மன் கில் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவை வெற்றி பெற செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 33 ஆண்டுகளில் காப்பா மைதானத்தில் தோல்வியையே கண்டிராத ஆஸ்திரேலியாவின் சாதனையை இந்த வெற்றி மூலம் இந்திய இளம் அணி முறியடித்துள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் 4வது போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று முடிந்துள்ளது. இதையடுத்து 4 போட்டிகளை கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி கொண்டுள்ளது. விராட் கோலி, பும்ரா, ஷமி, இஷாந்த், உமேஷ், அஸ்வின் மற்றும் ஜடேஜா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத இந்திய அணியை இளம் வீரர்கள் வெற்றி பெற செய்துள்ளனர்.

காப்பாவில் இறுதி போட்டி நடைபெற்ற நிலையில், இந்த போட்டியில் இந்தியா வெற்றி கொண்டுள்ளது. காப்பா மைதானத்தில் கடந்த 33 ஆண்டுகளாக நடைபெற்ற போட்டிகளில் ஆஸ்திரேலியா தோல்வியே கண்டதில்லை. இந்நிலையில் இந்த 33 ஆண்டுகால சாதனையை இளம் இந்திய அணி தனது வெற்றி மூலம் முறியடித்துள்ளது.

Related posts

ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரராக ரொனால்டோ சாதனை

piragazh

தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்…

piragazh