சினி செய்திகள்

பிக்பாஸ் வெற்றிக்கு பிறகு ஆரி வெளியிட்ட முதல் வீடியோ…”இந்த வெற்றி என்னுடையது அல்ல”

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். அதுவும் இதுவரை இல்லாத அளவிற்கு 16 கோடி வாக்குகளை பெற்று அவர் முன்னிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

aari video message after biggboss4tamil ஆரி வெளியிட்ட முதல் வீடியோ

அதற்கு முக்கிய காரணமாக அவரது நேர்மையும், மன உறுதியும், சமூக அக்கறையும் ஒரு காரணம். இப்படி  எந்தவித எதிர்பார்ப்புமின்றி களமிறங்கி இன்று அனைவரையும் கவர்ந்திருக்கும் ஆரி நிச்சயம் பிக்பாஸ்  வரலாற்றில் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நேற்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர் முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ள்ளார். அதில் அவர் கூறும் பொழுது “மாதா, பிதா, குரு, தெய்வத்துக்கு வணக்கம். என் தமிழ் மொழிக்கு முதல் வணக்கம். இந்த பிக்பாஸ் வீட்டில் எனக்கு கிடைத்த வெற்றி என்னுடைய வெற்றி அல்ல. உங்களுடைய வெற்றி. உழைக்கும் சமூகத்திற்கான வெற்றி. உழைக்கும் வர்க்கத்திற்கான வெற்றி. உழைக்கும் மக்களுக்கான வெற்றி. இந்த வாரம் என்னுடைய டிவிட்டர் பக்கத்தில் உங்களை சந்திக்கிறேன். எல்லா புகழும் உங்களுக்கே” என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

https://www.youtube.com/embed/RvBWrh3Nfrc?rel=0

Related posts

பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் ஆரி.. கோப்பையை கைப்பற்றி மாபெரும் தருணம்.. நெகிழ்ச்சியான பேச்சு

piragazh

அப்பாவிடம் பொய் சொல்லிட்டு ஸ்ரீதேவி மகள் செய்த திருட்டுத்தனம் தெரியுமா?

piragazh

நடிகர் அப்பாஸ்க்கு இவ்வளவு பெரிய மகளா?

piragazh