மாடலிங், அழகுப்போட்டிகள், பரிந்துரைகள் என திரையுலகிற்கு அறிமுகமாகும் நடிகைகள் சிலர் மத்தியில், பிறமொழி திரைப்படங்கள், இணையதள தொடர்களில் நடித்து பிரபலமான பின்னர் அந்த பிரபலத்தின் மூலம் பிறமொழி திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் பெறுகின்றனர் மற்றும் சிலர். இங்கு 2019-ல் வெளியான திரைப்படங்களில் நாயகியாக நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கி மக்களின் ஆதரவை பெற்று பிரபலமாகியுள்ள நடிகைகள், தான் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்ந்து மேலும் படவாய்ப்புகளை அள்ளும் நடிகைகள் என தமிழ் திரையுலகில் 2019-ஆம் ஆண்டு நாயகியாக அறிமுகமாகியுள்ள நடிகைகளின் பட்டியல் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.