விளையாட்டு

ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரராக ரொனால்டோ சாதனை

யூரோ கிண்ணப் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளாா். நேற்றையதினம் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற யூரோ கிண்ண கால்பந்து தொடரின் போட்டியில் ஹங்கேரி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் அணி வென்றது.

இந்த போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல் அடித்திருந்தார். இதன்மூலம் 36 வயதான ரொனால்டோ ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் (மொத்தம் 11 கோல்) அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். மேலும், போர்த்துக்கல் அணிக்காக அவர் 106 கோல்கள் அடித்துள்ளாா்.

இதற்கு முன் பிரான்சின் மைக்கேல் பிளாட்டினி 9 கோல் போட்டதே சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது

 

 

Related posts

33 வருஷ ஆஸ்திரேலிய சாதனை… முறியடித்த இளம் இந்திய அணி…

piragazh

தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்…

piragazh